தமிழ்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

செந்தில் நாதன் அரசாங்கம்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்

தினமும் கூடும் தெய்வாம்சம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்

தினமும் கூடும் தெய்வாம்சம்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

செந்தில் நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற இடம்

அது தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும்

வரும் ஐப்பசி திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம்

அன்பர் திருநாள் காணுமிடம்

அசுரரை வென்ற இடம்

அது தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும்

வரும் ஐப்பசி திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம்

அன்பர் திருநாள் காணுமிடம்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்

தினமும் கூடும் தெய்வாம்சம்

கோவிலின் அருகினில்

கூடிய கூட்டங்கள்

தலையா கடல் அலையா

குழந்தைகள் பெரியவர்

அனைவரை இழுக்கும்

குமரனவன் கலையா

கோவிலின் அருகினில்

கூடிய கூட்டங்கள்

தலையா கடல் அலையா

குழந்தைகள் பெரியவர்

அனைவரை இழுக்கும்

குமரனவன் கலையா

திருச்செந்தூரின் கடலோரத்தில்

செந்தில் நாதன் அரசாங்கம்

தேடி தேடி வருவோர்க்கெல்லாம்

தினமும் கூடும் தெய்வாம்சம்

மங்கையரின் குங்குமத்தை

காக்கும் முகம் ஒன்று

வாடுகின்ற ஏழைகளை

காணும் முகம் ஒன்று

சஞ்சலத்தில் வந்தவரை

தாங்கும் முகம் ஒன்று

ஜாதி மத பேதமின்றி

பார்க்கும் முகம் ஒன்று

நோய் நொடிகள்

தீர்த்து வைக்கும்

வண்ண முகம் ஒன்று

நூறு முகம் காட்டுதம்மா

ஆறுமுகம் இங்கு

மங்கையரின் குங்குமத்தை

காக்கும் முகம் ஒன்று

வாடுகின்ற ஏழைகளை

காணும் முகம் ஒன்று

சஞ்சலத்தில் வந்தவரை

தாங்கும் முகம் ஒன்று

ஜாதி மத பேதமின்றி

பார்க்கும் முகம் ஒன்று

நோய் நொடிகள்

தீர்த்து வைக்கும்

வண்ண முகம் ஒன்று

நூறு முகம் காட்டுதம்மா

ஆறுமுகம் இங்கு

ஆறுமுகம் இங்கு

திருச்செந்தூரின் கடலோரத்தில்

செந்தில் நாதன் அரசாங்கம்

தேடி தேடி வருவோர்க்கெல்லாம்

தினமும் கூடும் தெய்வாம்சம்

பொன்னழகு மின்னி வரும்

வண்ண மயில் கந்தா

கண்மலரில் தன்னருளை

காட்டி வரும் கந்தா

பொன்னழகு மின்னி வரும்

வண்ண மயில் கந்தா

கண்மலரில் தன்னருளை

காட்டிவரும் கந்தா

நம்பியவர் வந்தால்

நெஞ்சுருகி நின்றால்

கந்தா முருகா

நம்பியவர் வந்தால்

நெஞ்சுருகி நின்றால்

கந்தா

முருகா

வருவாய்

அருள் தருவாய்

முருகா

Song information

படம்: தெய்வம் (1972)

இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன்

Album: தெய்வம்

Explore this song