தமிழ்

பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான்
பூ பூத்தது
பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான்
பூ பூத்தது
மழை சுடுகின்றதே
அடி அது காதலா
தீ குளிா்கின்றதே
அடி இது காதலா
இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா
குழு : ஆஆஆ ததித தநிநிச
ஆஆஆ ததித தநிநிச
குழு : நெஞ்சத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சைக்கிளி
மொட்டுக்கள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி
பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது
ஆண் : மல்லிகைப்பூ வாசம்
என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை
முள்ளை போல குத்துகின்றது
பெண் : நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
ஆண் : கண்ணே உன் முந்தானை
காதல் வலையா
உன் பாா்வை குற்றால
சாரல் மழையா
பெண் : அன்பே உன் ராஜாங்கம்
எந்தன் மடியா
நீ மீட்டும் பொன்வீணை
எந்தன் இடையா
ஆண் : இதயம் நழுவுதடி
உயிரும் கரையுதடி
உன்னோடுதான்
குழு : ஆஆஆ ததித தநிநிச
ஆஆஆ ததித தநிநிச
குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப் போல
பற்றிக் கொள்ளு கண்மணி
பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது
பெண் : கண்ணுக்குள்ளே
உந்தன் முகம்
ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள்
என்னை வந்து
சுற்றிக்கொண்டது
ஆண் : என்னை விட்டு
தென்றல் கொஞ்சம்
தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை
சொன்னபோது
அள்ளிக்கொண்டது
பெண் : அன்பே நான் எந்நாளும்
உன்னை நினைத்து
புல் மீது பூவானேன்
தேகம் இளைத்து
ஆண் : வில்லோடு அம்பாக
என்னை இணைத்து
சொல்லாத சந்தோச
யுத்தம் நடத்து
பெண் : உலக அதிசயத்தில்
ஒன்று கூடியது
நம் காதலால்
குழு : ஆஆஆ ததித தநிநிச
ஆஆஆ ததித தநிநிச
குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப் போல
பற்றிக் கொள்ளு கண்மணி
பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான்
பூ பூத்தது
பெண் : மழை சுடுகின்றதே
அடி அது காதலா
தீ குளிா்கின்றதே
அடி இது காதலா
இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா
பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது

Song video

Watch on YouTube

Song details

படம்: பூவே உனக்காக (1996)

இசை: எஸ்.ஏ. ராஜ்குமாா்

பாடலாசிரியர்: பழனி பாரதி

பாடியவர்கள்: பி. ஜெயச்சந்திரன், சுஜாதா மோகன்

Album: பூவே உனக்காக