தமிழ்

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே

அதுக்கு நல்ல காலம்

குழு : பொறந்துருக்கு

ஆண் : நேரம்

குழு : கனிஞ்சிருக்கு

ஆண் : ஊரும்

குழு : தெளிஞ்சிருக்கு

ஆண் : உண்மை

குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த

உண்மையுள்ள கூட்டம் உண்டு

உன்னோடு ரத்தம் சிந்த

உண்மையுள்ள கூட்டம் உண்டு

ஆண் : ரெண்டில் ஒன்று

பார்க்கும் வரைக்கும்

அட ரெண்டு கண்ணில்

இல்லை உறக்கம்

சபதம் செய்து

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே

அதுக்கு நல்ல காலம்

குழு : பொறந்துருக்கு

ஆண் : நேரம்

குழு : கனிஞ்சிருக்கு

ஆண் : ஊரும்

குழு : தெளிஞ்சிருக்கு

ஆண் : உண்மை

குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஹேய்

ஆண் : பெத்தவர்கள்

நினைத்ததை முடிப்பான்

குழு : முடிப்பான்

ஆண் : மற்றவர்கள் சுகத்துக்கு

உழைப்பான்

குழு : உழைப்பான்

ஆண் : சத்தியத்தின் பாதை வழி

நடப்பான்

குழு : நடப்பான்

ஆண் : மக்கள் பணம்

மக்களுக்கே கொடுப்பான்

குழு : கொடுப்பான்

ஆண் : துன்பம் அது முடிகிறதே

இவன் சொன்னால்

இரவும் விடிகிறதே

ஆஹா ஒரு வார்த்தையிலே

அட ஆகாயம்தான் விடிகிறதே

தீமை விலகிட

நன்மை பெருகிட

குழு : சட்டம் தீட்டும்

திட்டம் கிட்டும்

ஆண் : சிங்கம் ஒன்று

குழு: ஹேய்

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே

அதுக்கு நல்ல காலம்

குழு : பொறந்துருக்கு

ஆண் : நேரம்

குழு : கனிஞ்சிருக்கு

ஆண் : ஊரும்

குழு : தெளிஞ்சிருக்கு

ஆண் : உண்மை

குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஹேய்

ஆண் : பார்ப்பதற்கு பாமரன்

போல் இருப்பான்

குழு : இருப்பான்

ஆண் : வேளை வந்தால்

விஸ்வரூபம் எடுப்பான்

குழு : எடுப்பான்

ஆண் : கெட்டவங்க

முகமூடி கிழிப்பான்

குழு : கிழிப்பான்

ஆண் : நல்லவங்க சொல்லும்

சொல்லை மதிப்பான்

குழு : மதிப்பான்

ஆண் : பகையே நீ துள்ளாதே

இவன் போகும் வழியில் நில்லாதே

சீறும் சிங்கம் இவனல்லோ

இவனை புழுவாய் நீ எண்ணாதே

தீமை விலகிட நன்மை பெருகிட

குழு : சட்டம் தீட்டும்

திட்டம் கிட்டும்

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே

அதுக்கு நல்ல காலம்

குழு : பொறந்துருக்கு

ஆண் : நேரம்

குழு : கனிஞ்சிருக்கு

ஆண் : ஊரும்

குழு : தெளிஞ்சிருக்கு

ஆண் : உண்மை

குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே

உன்னோடு ரத்தம் சிந்த

உண்மையுள்ள கூட்டம் உண்டு

உன்னோடு ரத்தம் சிந்த

உண்மையுள்ள கூட்டம் உண்டு

ரெண்டில் ஒன்று

பார்க்கும் வரைக்கும்

அட ரெண்டு கண்ணில்

இல்லை உறக்கம்

சபதம் செய்து

சிங்கம் ஒன்று புறப்பட்டதே

அதுக்கு நல்ல காலம்

குழு : பொறந்துருக்கு

ஆண் : நேரம்

குழு : கனிஞ்சிருக்கு

ஆண் : ஊரும்

குழு : தெளிஞ்சிருக்கு

ஆண் : உண்மை

குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே

ஹேய் ஹா ஹா

Song information

படம்: அருணாச்சலம் (1997)

இசை: தேவா

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Album: அருணாச்சலம்

Explore this song