தமிழ்

குமுசுமு குமுசுமு கும் பு சுப்

குமுசுமு கும் பு சுப்

குமுசுமு குமுசுமு கும் பு சுப்

குமுசுமு கும் பு சுப்

சலசல சலசல சோலைக் கிளியே

ஜோடியைத் தேடிக்க

சிலுசிலு சிலுசிலு சக்கரை நிலவே

மாலையை மாத்திக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா

மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம்

மனசுல வச்சிக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா

மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம்

மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக் கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

கமபப ஆஆஆ ஆஆஆ கமபபரீ

நிதனிப நிதனிப பப த

கமபப நிபபப பமரீ கம கம கம

நி சா சா சா நி சா சா சா

நி சா நி சா நி சா

நிச நிச நிச நிச நிச நிச

நிசனித பபமா

சகமபகம நிதப ஆஆஆ

உந்தன் கண் ஜாடை விழுந்ததில்

நெஞ்சம் நெஞ்சம்

தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்

எந்தன் நூலாடை பறந்ததில்

கொஞ்சம் கொஞ்சம்

பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதி கொதிக்கும்

உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல

சித்தம் துடி துடிக்கும்

புயல் எதிர்த்திடும் ஓர் இலைப் போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது

மூங்கில் காடென்று ஆயினள் மாது

கண்ணாளனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

குமுசுமு குமுசுமு கும் பு சுப்

குமுசுமு கும் பு சுப்

குமுசுமு குமுசுமு கும் பு சுப்

குமுசுமு கும் பு சுப்

சலசல சலசல சோலைக் கிளியே

ஜோடியைத் தேடிக்க

சிலுசிலு சிலுசிலு சக்கரை நிலவே

மாலையை மாத்திக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா

மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம்

மனசுல வச்சிக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா

மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம்

மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம்

வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன்

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம்

தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன்

இந்த உலகத்தில் நானில்லை நானில்லை

உன்னை இழந்துவிட்டால்

எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை நனவா

என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்

உன்னைப் பார்தெந்தன்

தாய்மொழி மறந்தேன்

கண்ணாளனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

கண்ணாளனே...

Song information

படம்: பம்பாய் (1995)

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்: சித்ரா

Album: பம்பாய்

Explore this song