தமிழ்
ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி பெண் : என் கண் பார்த்தது என் கை சேருமோ ஆண் : கை சேராமலே கண்ணீர் சேருமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா ஆண் : உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் பெண் : மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் ஆண் : கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும் காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் பெண் : உன்னைத் தேடியே இனி எனது பயணமோ எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ ஆண் : ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஹே ஹேய் காதல் முகம் கண்டுகொண்டேன் ஹே ஹேய் ஆண் : விரல் தொடும் தூரத்திலே ஹே ஹேய் வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆண் : நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது உயிரின் தேடல் கடைசியில் உனைக் காண்பது பெண் : கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் ஆண் : நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன் பெண் : ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன் ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன் பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : விரல் தொடும் தூரத்திலே பெண் : விரல் தொடும் தூரத்திலே ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்
Song information
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
பாடியவர்கள்: ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
Album: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Explore this song
- Singer: ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்
- Film / album: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
- Composer: ஏ.ஆர். ரஹ்மான்
- Lyricist: வைரமுத்து
- Actor: மம்முட்டி
- Actor: அஜித் குமார்
- Actor: தபூ
- Actor: ஐஸ்வர்யா ராய்
- Actor: அப்பாஸ்
- Actor: மணிவண்ணன்
- Actor: ஸ்ரீவித்யா
- Actor: ரகுவரன்
- Actor: நிழல்கள் ரவி
- Actor: ஷாமிலி
- Actor: அனிதா ரத்னம்