தமிழ்
பெண்: எஸ் ஐ லவ் திஸ் இடியட் ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட் ஆண்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இருவர் : இதம் தரும் காதல் பெண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இருவர் : இதம் தரும் காதல் ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் ஆண்: கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பெண்: பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ ஆண்: மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி பெண்: இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே ஆண்: தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் பெண்: இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம் ஆண்: இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் பெண்: அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட ஆண்: இதம் தரும் காதல் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பெண்: இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஆண்: புது மோகம் பெண்: பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை பெண்: கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உறவாய் தொடர்வாய் பெண்: தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் ஆண்: இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் பெண்: இதயம் இடம் மாறும் ஆண்: ம்ம்ம் பெண்: இளமை பரிமாறும் ஆண்: அமுதும் வழிந்தோடும் பெண்: ம்ம்ம் ஆண்: அழகில் கலந்தாட பெண்: இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ஆண்: இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் பெண்: புது மோகம்
Song information
படம்: கோபுர வாசலிலே (1991)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே எஸ். சித்ரா
Album: கோபுர வாசலிலே
Explore this song
- Singer: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே எஸ். சித்ரா
- Film / album: கோபுர வாசலிலே
- Composer: இளையராஜா
- Lyricist: கவிஞர் வாலி
- Actor: கார்த்திக்
- Actor: பானுப்பிரியா
- Actor: சுசித்ரா
- Actor: நாசர்
- Actor: ஜனகராஜ்
- Actor: சார்லி
- Actor: ஜீனியர் பாலையா
- Actor: மோகன்லால்