தமிழ்

ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

என்னைத் தேடி வர தூது சொல்லு

ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

என்னைத் தேடி வர தூது சொல்லு

ஏரிக்கரை பூங்காற்றே

பாதமலர் நோகுமுன்னு

நடக்கும் பாதைவழி பூ விரிச்சேன்

மயிலே

பாதமலர் நோகுமுன்னு

நடக்கும் பாதைவழி பூ விரிச்சேன்

மயிலே

ஓடம் போல் ஆடுதே மனசு

கூடித் தான் போனதே வயசு

காலத்தின் கோலத்தால்

நெஞ்சம் வாடுது

அந்த பொன்னான நினைவுகள்

கண்ணீரில் கரையுது

ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

என்னைத் தேடி வர தூது சொல்லு

ஏரிக்கரை பூங்காற்றே

ஓடிச் செல்லும் வான் மேகம்

நிலவ மூடிக் கொள்ளப் பார்க்குதடி

அடியே

ஓடிச் செல்லும் வான் மேகம்

நிலவ மூடிக் கொள்ளப் பார்க்குதடி

அடியே ஜாமத்தில் பாடுறேன் தனியா

ராகத்தில் சேரனும் துணையா

நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்

அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு

ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

என்னைத் தேடி வர தூது சொல்லு

ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

Song information

படம்: தூறல் நின்னு போச்சு (1982)

பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்

இசை: இளையராஜா

இயற்றியவர்: சிதம்பரநாதன்

Album: தூறல் நின்னு போச்சு

Explore this song