தமிழ்
பெண் : என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும் மூடிக் கெடக்கும் பல கண்ணும் தொறந்திடும் கேட்டா மடையனுக்கும் குழு : ஞானம் பொறந்திடும் பெண் : அட மூடிக் கெடக்கும் பல குழு : கண்ணும் தொறந்திடும் பெண் : பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : தேவாரமும் படிச்சோம் திருவாசகம் படிச்சோம் தெரியாம திருக்குறளும் தான் படிச்சோம் ஆனான படிப்பை எல்லாம் அன்னாடம் படிச்சிப்புட்டு புரியாம தெரியாம தான் முழிச்சோம் அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வைப்பாட்டி அதக்கூட பாடி என்ன கிழிச்சிப்புட்டோம் குழு : அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வைப்பாட்டி அதக்கூட பாடி என்ன கிழிச்சிப்புட்டோம் பெண் : நாடும் என்னாச்சு நம்ம ஊரும் என்னாச்சு அட பேசிப் பேசித்தான் நல்ல பொழுதும் போயாச்சு இந்த தேசம் ரொம்ப மோசம் இதப் பார்க்கும்போது இப்ப பெண் : என்னப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : காம்போதியும் தெரியும் கல்யாணியும் புரியும் பொதுவாக நெனச்சதும் நான் பாட்டெடுப்பேன் ஆகாத பொழப்பை எல்லாம் அநியாய நடப்பை எல்லாம் அஞ்சாம என் பாட்டில் போட்டுடைப்பேன் பெண் : நாய் வால நிமிர்த்துறதும் காக்காய வெளுக்குறதும் அம்மாடி யாரால ஆகும் இப்போ குழு : நாய் வால நிமிர்த்துறதும் காக்காய வெளுக்குறதும் அம்மாடி யாரால ஆகும் இப்போ பெண் : பார்க்கப் போனாக்க நான் பொட்டப் புள்ள தான் அட போட்டிப் போட்டாக்க ரொம்ப கெட்டப் புள்ள தான் ஒரு வேகம் ஒரு கோபம் ஒண்ணு சேரும்போது இப்ப பெண் : என்னப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் பெண் : அதக் கேட்டா மடையனுக்கும் குழு : ஞானம் பொறந்திடும் பெண் : மூடிக் கெடக்கும் பல குழு : கண்ணும் தெறந்திடும் பெண் : பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்
Song information
படம்: ஆண் பாவம் (1985)
பாடியவர்கள்: எஸ். ஜானகி மற்றும் குழு
இசை: இளையராஜா
இயற்றியவர்: வாலி
Album: ஆண் பாவம்
Explore this song
- Singer: எஸ். ஜானகி மற்றும் குழு
- Film / album: ஆண் பாவம்
- Composer: இளையராஜா
- Actor: பாண்டியராஜன்
- Actor: பாண்டியன்
- Actor: ரேவதி
- Actor: சீதா
- Actor: வி. கே. ராமசாமி
- Actor: ஜனகராஜ்
- Actor: ஐ.எஸ். முருகேசன்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன்
- Actor: ‘சூப்பர்’ சுப்பராயன்
- Actor: கொல்லங்குடி கருப்பாயி
- Actor: உசிலை மணி
- Actor: ‘பசி’ நாராயணன்
- Actor: ரமேஷ் கண்ணா
- Actor: ஓமக்குச்சி நரசிம்மன்
- Actor: ஹாஜா செரீப்நெல்லை சிவா
- Actor: ‘தவக்களை’ சிட்டிபாபு