தமிழ்

பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ

பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ

பார்வதி தாயே பணிந்தேன் நானே

பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ

டேய் யாருடா அவன் பங்கஜத்த பத்தி பாடுறவன்

நாந்தானுங்க சாமி

பங்கஜம் என்னடா பங்கஜம் என் மங்களத்த பத்தி பாடுறா

மங்களம் கடைசில தானுங்க பாடனும்

டேய் நான் சொல்றேன் முதல்லியே பாடுறா

இன்னும் அட்வான்ஸ் வாங்களைங்களே

அட்வான்சாவது கிட்வான்சாவது

தள்ளிக்கடா நாங்களே பாடுறோம்

மாமா

மாப்ள

நீ ஆரம்பி

மன்னாதி மன்னனையெல்லாம் பார்த்தவன் நான்

அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்

அப்பேர்பட்ட என்னை

பஞ்சாயத்துல நிறுத்திட்டாங்களே படுபாவிப் பசங்க

ஆமாம்

என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்து என்ன

ஆமாம்

என் குஸ்தி என்ன பஸ்தி என்ன தண்டால் என்ன

ஆமாம்

இதை நான் என்ன சொல்வேன் என்ன செய்வேன்

ஆஆஆ மாப்ளே

இதுக்கு மேல நீயே பாடுறா

அட உன் கதை எனக்கெதுக்கு மாமா

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அதக் கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

இந்த ஊரு பொண்ண நம்பி

எம்மனச தொறந்து வச்சேன்

சொந்த ஊரு சாதி சனம்

அத்தனையும் மறந்து வந்தேன்

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

ஆத்தங்கரை தோப்புக்குள்ள

ஓடி விளையாண்டதும்

யாருமில்ல சமயத்துல

ஜாடையில சிரிச்சதும்

தோட்டத்துல வரப்புக்குள்ள

தொட்டு தொட்டு புடிச்சதும்

தூண்டில் போட்டு மீனை சுட்டு

ரெண்டு பேரும் கடிச்சதும்

அத்தனையும் மறந்துபுட்டு

இவன் நெஞ்சை வதைக்கிறா

அப்பனோட பேச்ச மட்டும்

பெருசாக நினைக்குறா

ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ

அம்போன்னு முழிக்குறான்

ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ

அம்போன்னு முழிக்குறான்

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அதக் கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆசை வச்ச ஆம்பிளை நான்

ஆண்டியா அலையுறேன்

அல்லும் பகல் உன்னை எண்ணி

தெருவுல திரியுறேன்

நேத்துவரை நடந்ததெல்லாம்

தெய்வம் செஞ்ச சோதனை

நீ மட்டும் மனசு வச்சா

தீந்துவிடும் வேதனை

நான் மட்டும் இல்லையினா

சன்யாசம் வாங்கிருப்பான்

காசி முதல் ராமேஸ்வரம்

காவி கட்டி போயிருப்பான்

மங்களத்த பெத்தவனே

உம்மனச மாத்திக்கடா

மங்களத்த பெத்தவனே

உம்மனச மாத்திக்கடா

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அதக் கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

இந்த ஊரு பொண்ண நம்பி

எம்மனச தொறந்து வச்சேன்

சொந்த ஊரு சாதி சனம்

அத்தனையும் மறந்து வந்தேன்

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அதக் கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

Song information

படம்: தூறல் நின்னு போச்சு (1982)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி

இசை: இளையராஜா

இயற்றியவர்: கங்கை அமரன்

Album: தூறல் நின்னு போச்சு

Explore this song