தமிழ்
என் கண்மணி உன் காதலி இளமாங்கனி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ நன்னா சொன்னேள் போங்கோ என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ என் கண்மணி... இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில் இளமாமயில்... அருகாமையில்... வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று, அனுபவம் சொல்லவில்லையோ இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ... என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ என் கண்மணி... தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு... மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே அடையாளச் சின்னம் ஒன்று தரவேண்டுமே இரு தோளிலும் மணமாலைகள் கொண்டாடும் காலம் என்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ
Song information
படம்: சிட்டுக்குருவி (1978)
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் பி சுசீலா கோவை பாபு பாஸ்கர்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
Album: சிட்டுக்குருவி
Explore this song
- Singer: எஸ். பி. பாலசுப்ரமணியம் பி சுசீலா கோவை பாபு பாஸ்கர்
- Film / album: சிட்டுக்குருவி
- Composer: இளையராஜா
- Lyricist: வாலி
- Actor: சிவகுமார்
- Actor: சுமித்ரா
- Actor: எஸ்.என்.லட்சுமி
- Actor: செந்தாமரை
- Actor: சுருளிராஜன்
- Actor: வெண்ணிற ஆடை மூர்த்தி