தமிழ்

பெண் : எண்ணி இருந்தது ஈடேற

ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

பெண் : கன்னி மனம் இன்று சூடேற

ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

பெண் : எண்ணி இருந்தது ஈடேற

கன்னி மனம் இன்று சூடேற

இமை துள்ள தாளம் சொல்ல

இமை துள்ள தாளம் சொல்ல

இத என்ன சுரம் சொல்லி நான் பாட

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற

பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

ஆண் : கன்னி மனம் இன்று சூடேற

பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற

கன்னி மனம் இன்று சூடேற

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

அது சுரம் சொல்லித் தரும் நீ பாடு

ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க

ரெண்டு வருஷம் நினைச்சேன்

ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க

ரெண்டு வருஷம் நினைச்சேன்

உன் குரலை கேட்ட பிறகு தானே

ராகம் கண்டு புடிச்சேன்

உன் குரலை கேட்ட பிறகு தானே

ராகம் கண்டு புடிச்சேன்

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்

முல்ல பூவ தொடுத்தேன்

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்

முல்ல பூவ தொடுத்தேன்

உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி

நாரத்தானே முடிஞ்சேன்

உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி

நாரத்தானே முடிஞ்சேன்

ஆண் : நினைச்சேன் சொல்ல தவிச்சேன்

பெண் : நான் கனவில் முத்து குளிச்சேன்

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற

பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

ஆண் : கன்னி மனம் இன்று சூடேற

பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

அது சுரம் சொல்லித் தரும் நீ பாடு

பெண் : சாரல் மேகம் சரசம் பேசி

மனசை வந்து நனைக்கும்

பெண் : சாரல் மேகம் சரசம் பேசி

மனசை வந்து நனைக்கும்

இந்த ஆசை வேகம் பாத்து

பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்

இந்த ஆசை வேகம் பாத்து

பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்

ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து

இரவில் வெளக்கு அணைக்கும்

ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து

இரவில் வெளக்கு அணைக்கும்

உன் கூந்தல் மீது ஜாதி மல்லி

விடியும் வரைக்கும் மணக்கும்

உன் கூந்தல் மீது ஜாதி மல்லி

விடியும் வரைக்கும் மணக்கும்

பெண் : மயக்கம் உண்டு எனக்கும்

ஆண் : அட இருந்தும் என்ன தயக்கம்

பெண் : எண்ணி இருந்தது ஈடேற

ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ

பெண் : கன்னி மனம் இன்று சூடேற

ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ

ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

மெட்டி சத்தம் மெட்டு சந்தம்

அது சுரம் சொல்லித் தரும் நீ பாடு

Song information

படம்: அந்த 7 நாட்கள் (1981)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

இயற்றியவர்: வைரமுத்து

Album: அந்த 7 நாட்கள் (Antha Ezhu Naatkal)

Explore this song