தமிழ்

ஆண் : எங்கே செல்லும்

இந்த பாதை

யாரோ யாரோ அறிவார்

குழு : ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

ஓஓ ஒஹோ ஓஓ ஹோ

ஆண் : எங்கே செல்லும்

இந்த பாதை

யாரோ யாரோ அறிவார்

காலம் காலம்

சொல்ல வேண்டும்

யாரோ உண்மை அறிவார்

ஆண் : நேரத்திலே நான்

ஊர் செல்ல வேண்டும்

வழி போக துணையாய்

அன்பே வாராயோ

ஆண் : எங்கே செல்லும்

இந்த பாதை

யாரோ யாரோ அறிவார்

ஆண் : ஊரை விட்டு ஓ

ஓர் குடிசை

அங்கே யார் சென்று

போட்டு வைத்தார்

காதலிலே ஓர் பைத்தியமே

சொர்க்கம் அதுவென்றே

கட்டி வைத்தார்

காணும் கனவுகளில்

இன்பம் இன்பம்

உண்மை அதற்கு வெகு

தூரம் தூரம்

காதல் என்றால்

ஓ வேதனையா

ஆண் : எங்கே செல்லும்

இந்த பாதை

யாரோ யாரோ அறிவார்

காலம் காலம்

சொல்ல வேண்டும்

யாரோ உண்மை அறிவார்

ஆண் : மண் கேட்டா

அந்த மழை பொழியும்

மேகம் பொழியாமல்

போவதுண்டா

கரை கேட்டா

அந்த அலைகள் வரும்

அலைகள் தழுவாமல்

போவதுண்டா

கண்ணீர் மழை உந்தன்

முன்னே முன்னே

காதல் மழையை பொழி

கண்ணே கண்ணே

என் உயிரே ஓ என் உயிரே

ஆண் : எங்கே செல்லும்

இந்த பாதை

யாரோ யாரோ அறிவார்

காலம் காலம்

சொல்ல வேண்டும்

யாரோ உண்மை அறிவார்

ஆண் : நேரத்திலே நான்

ஊர் செல்ல வேண்டும்

வழி போக துணையாய்

அன்பே வாராயோ

ஆண் : எங்கே செல்லும்

இந்த பாதை

யாரோ யாரோ அறிவார்

காலம் காலம்

சொல்ல வேண்டும்

யாரோ உண்மை அறிவார்

Song information

படம்: சேது (1999)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: அறிவுமதி

பாடியவர்: இளையராஜா

Album: சேது

Explore this song