தமிழ்

ஆண் : உயிரே உயிரே

வந்து என்னோடு கலந்து விடு

உயிரே உயிரே

என்னை உன்னோடு கலந்து விடு

நினைவே நினைவே

எந்தன் நெஞ்சோடு கலந்து விடு

நிலவே நிலவே

இந்த விண்ணோடு கலந்து விடு

காதல் இருந்தால்

எந்தன் கண்ணோடு கலந்து விடு

காலம் தடுத்தால்

என்னை மண்ணோடு கலந்து விடு

ஆண் : உயிரே உயிரே

வந்து என்னோடு கலந்து விடு

நினைவே நினைவே

எந்தன் நெஞ்சோடு கலந்து விடு

ஆண் : என் சுவாசக் காற்று

வரும் பாதை பாா்த்து

உயிா் தாங்கி நானிருப்பேன்

மலா் கொண்ட பெண்மை

வாராமல் போனால்

மலை மீது தீக்குளிப்பேன்

என் உயிா் போகும்

போனாலும் துயாில்லை கண்ணே

அதற்காகவா பாடினேன்

வரும் எதிா்காலம்

உன் மீது பழி போடும் பெண்ணே

அதற்காகத்தான் வாடினேன்

முதலா முடிவா

அதை உன் கையில் கொடுத்து விட்டேன்

பெண் : உயிரே உயிரே

இன்று உன்னோடு கலந்து விட்டேன்

உறவே உறவே

இன்று என் வாசல் கடந்து விட்டேன்

நினைவே நினைவே

உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்

கனவே கனவே

உந்தன் கண்ணோடு கறைந்து விட்டேன்

ஆண் : காதல் இருந்தால்

எந்தன் கண்ணோடு கலந்து விடு

காலம் தடுத்தால்

என்னை மண்ணோடு கலந்து விடு

உயிரே உயிரே

வந்து என்னோடு கலந்து விடு

நினைவே நினைவே

எந்தன் நெஞ்சோடு கலந்து விடு

பெண் : ஓா் பாா்வை பாா்த்தே

உயிா் தந்த பெண்மை

வாராமல் போய்விடுமா

ஒரு கண்ணில் கொஞ்சம்

வலி வந்த போது

மறுகண்ணும் தூங்கிடுமா

நான் கரும்பாறை பல தாண்டி

வேராக வந்தேன்

கண்ணாளன் முகம் பாா்க்கவே

என் கடுங்காவல் பல தாண்டி

காற்றாக வந்தேன்

கண்ணா உன் குரல் கேட்கவே

அடடா அடடா

இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

ஆண் : உயிரே உயிரே

வந்து என்னோடு கலந்து விடு

உயிரே உயிரே

என்னை உன்னோடு கலந்து விடு

நினைவே நினைவே

எந்தன் நெஞ்சோடு கலந்து விடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு

கலந்து விடு

பெண் : மழை போல் மழை போல்

வந்து மண்ணோடு விழுந்து விட்டேன்

மனம் போல் மனம் போல்

உந்தன் ஊனோடு உறைந்து விட்டேன்

உயிரே உயிரே

இன்று உன்னோடு கலந்து விட்டேன்

நினைவே நினைவே

உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்

Song information

படம்: பம்பாய் (1995)

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்: ஹாிஹரன், கே.எஸ்.சித்ரா

Album: பம்பாய்

Explore this song