தமிழ்

ஆண் : ஆஆஆஆ

ஆஆஆஆ

ஆஆஆஆ

ஆண் : உதய கீதம் பாடுவேன்

உயிர்களை நான் தொடுவேன்

உதய கீதம் பாடுவேன்

ஒலிகளில் பூத் தொடுப்பேன்

ஆண் : உலகமெல்லாம் மறந்து போகும்

மரணம் கூட இறந்து போகும்

குழந்தைக்காகவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்

உதய கீதம் பாடுவேன்

ஆண் : பிள்ளை நாளை பார்க்குமே

எனை எங்கே என்று கேட்குமே

கண்கள் நீரை வார்க்குமே

அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே

ஆண் : தோளில் மாலை மாலையில்

தூக்கு மேடை காலையில்

அழுகின்ற உள்ளங்களே

வாழ்க வாழ்கவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்

உயிர்களை நான் தொடுவேன்

உலகமெல்லாம் மறந்து போகும்

மரணம் கூட இறந்து போகும்

குழந்தைக்காகவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்

உதய கீதம் பாடுவேன்

ஆண் : கண்ணே தீரும் சோதனை

இரு கண்ணில் என்ன வேதனை

கண்டேன் எந்தன் ஜீவனை

என் சாவில் கூட சாதனை

ஆண் : நாளை நானும் போகிறேன்

உன்னில் நானே வாழ்கிறேன்

பூப்போன்ற உள்ளங்களே

வாழ்க வாழ்கவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்

உயிர்களை நான் தொடுவேன்

உலகமெல்லாம் மறந்து போகும்

மரணம் கூட இறந்து போகும்

குழந்தைக்காகவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்

உதய கீதம் பாடுவேன்

Song information

படம்: உதய கீதம் (1985)

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: உதய கீதம்

Explore this song