தமிழ்
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா ஏ ஆரிராரோ.. ஆரிராரோ... ஆரிராரிராரோ ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ... பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொச்சுதுன்னு சொன்னாங்க கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க நானனனா நானனனாநனனா ஹேய்ய். ஹேய்... நான ஹேய்... நானனனா நானனனானா ஹேய்... பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க செங்கரையான் தின்னிருக்க நியாயமில்ல அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா
Song information
படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா
இசை: இளையராஜா
இயற்றியவர்: புலமைப்பித்தன்
Album: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
Explore this song
- Film / album: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
- Composer: இளையராஜா
- Actor: சிவக்குமார்
- Actor: தீபா
- Actor: சிவச்சந்திரன்
- Actor: வினு சக்கரவர்த்தி