தமிழ்
பெண் : அம்மா ஓ... ஹே... அம்மா ஹே... அம்மா... பெண் : இதத்தானே எதிர் பார்த்தேன் மனசோடு அடை காத்தேன் பெண் : தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே அடஞ்சாச்சு என் கூட்டையே பெண் : திச தேடி அலையோட படகோட அலஞ்சேனே கிடச்சாச்சே என் வாழ்க்கையே பெண் : நீ வாழ நான் பாக்கனும் வாயாற நான் வாழ்த்தனும் எனக்காக வேண்டாம உனக்காக வரம் கேப்பேனே அம்மா... பெண் : அழுதாலும் விழ வேணும் என் மேல தான் தொடச்சாலும் என் சேல தான் பெண் : என் தோளில் உன் கைகள் பூமால தான் அடையாளம் உன்னால தான் பெண் : கையோடு கைகோர்த்து ஊர்கோலமாய் சிறு பிள்ளை ஆவோம் வா பெண் : மனம் விட்டு நான் பேச நீ தேற்றினாய் இருப்பேனே சந்தோஷமா பெண் : ஓ... கடிகாரம் பாக்காமா உன் நேரம் எனக்காகுமா ஓ... நான் செய்த நன்மைகள் உன் மேல மழையாகுமா பெண் : என் காலம் பூரா நீ கூட வேணும் என் ஆயுள் கூட நீ வாழ வேணும் நான் பெண் : பார் உயிரெல்லாம் வெவ்வேறு தான் அன்பென்ற ஒரு நூலுதான் கதை மாலையாய் பெண் : எனக்குள்ள உனை பாத்து உனக்குள்ள எனை பாப்பதேன் அம்மா பெண் : ஓ... கடிகாரம் பாக்காமா உன் நேரம் எனக்காகுமா ஓ... நான் செய்த நன்மைகள் உன் மேல மழையாகுமா
Song information
படம்: J.பேபி (2024)
பாடியவர்: ஸ்வேத்தா மோகன்
இசை: டோனி பிரிட்டோ
பாடலாசிரியர்: விவேக்
Album: J.பேபி
Explore this song
- Film / album: J.பேபி
- Composer: டோனி பிரிட்டோ
- Lyricist: விவேக்
- Actor: ஊர்வசி
- Actor: அட்டகத்தி தினேஷ்
- Actor: லொள்ளு சபா மாறன்
- Actor: கவிதா பாரதி
- Actor: ஏழுமலை
- Actor: ஜெய மூர்த்தி