தமிழ்

ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்

அவளுக்கென்ன அழகிய முகம்

அவனுக்கென்ன இளகிய மனம்

நிலவுக்கென்ன

இரவினில் வரும் இரவுக்கென்ன

உறவுகள் தரும் உறவுக்கென்ன

உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

ஆண் : ஹோ அழகு ஒரு மேஜிக் டச்

ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஓஓஓ ஹோ அழகு ஒரு மேஜிக் டச்

ஓஓஓ ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஆண் : ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு

ஆனால் அவள் போல் பார்த்ததில்லை

ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு

ஆனால் அவள் போல் பார்த்ததில்லை

வா வா என்பதை விழியில் சொன்னாள்

மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்

அவனுக்கென்ன இளகிய மனம்

நிலவுக்கென்ன

இரவினில் வரும் இரவுக்கென்ன

உறவுகள் தரும் உறவுக்கென்ன

உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு

அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு

அன்பு காதலன் வந்தான் காற்றோடு

அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு

அவன் அள்ளி எடுத்தான் கையோடு

அவள் துள்ளி விழுந்தாள்

கனிவோடு கனிவோடு

பெண் : அவனுக்கென்ன இளகிய மனம்

அவளுக்கென்ன அழகிய முகம்

நிலவுக்கென்ன

இரவினில் வரும் இரவுக்கென்ன

உறவுகள் தரும் உறவுக்கென்ன

உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

ஆண் : சிற்றிடை என்பது

பெண் : முன்னழகு

ஆண் : சிறு நடை என்பது

பெண் : பின்னழகு

ஆண் : சிற்றிடை என்பது

பெண் : முன்னழகு

ஆண் : சிறு நடை என்பது

பெண் : பின்னழகு

ஆண் : பூவில் பிறந்தது

பெண் : கண்ணழகு

ஆண் : பொன்னில் விளைந்தது

பெண் : பெண்ணழகு

ஆண் : பூவில் பிறந்தது

பெண் : கண்ணழகு

ஆண் : பொன்னில் விளைந்தது

பெண் : பெண்ணழகு

ஆண் & பெண் : ல ல ல..லா லலலல லல்லல்ல லா

லலலல லல்லல்ல லா

லலலல லல்லல்ல லா

லலலல லல்லல்ல லா

லலலல லல்லல்ல லா

Song information

படம்: சர்வர் சுந்தரம் (1964)

பாடியவர்கள்: டி.எம். செளந்திரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடலாசிரியர்: வாலி

Album: சர்வர் சுந்தரம்

Explore this song