தமிழ்
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான் என் தெய்வம் மாங்கல்யம்தான் பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் அலையாதது பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
Song information
படம்: உதிரிப் பூக்கள் (1979)
பாடியவர்: எஸ். ஜானகி
இசை: இளையராஜா
இயற்றியவர்: கண்ணதாசன்
Album: உதிரிப் பூக்கள்
Explore this song
- Film / album: உதிரிப் பூக்கள்
- Composer: இளையராஜா
- Actor: விஜயன்
- Actor: அஸ்வினி
- Actor: மதுமாலினி
- Actor: சுந்தர்
- Actor: பிரேமி
- Actor: சரத்பாபு
- Actor: சாருஹாசன்
- Actor: பேபி அஞ்சு
- Actor: சாருலதா
- Actor: சாமிக்கண்ணு
- Actor: பூபதி
- Actor: குமரிமுத்து
- Actor: ஹாஜா ஷெரிப்