தமிழ்
குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா ஹே அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா ஆண் : அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ஆண் : ஆண்டவன் நடத்திடுவாண்டா குழு: ஹோய் ஹோய் ஹோய் ஆண் : அருணாச்சலம் நடத்திடுவாண்டா குழு: ஹோய் ஹோய் ஹோய் ஆண் : நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா ஆஆஆ ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : என் கண் இரடண்டையும் காப்பாத்தும் கண்ணிமையும் நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான் என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான் என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ஆ இன்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான் என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான் எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான் என் இறுதி வரை கூட வரும் கூட்டணியும் நீதான் குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஆண் : இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான் இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான் உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஹாஹா ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு நீ தனித்தனியா கோவில் குளம் அலைவது எதுக்கு அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து குழு : ஓ ஹோ ஓ ஹோ ஆண் : காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு அட காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தா தான் மதிப்பு நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஆண் : தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான் பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான் உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா ஹா ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ஆண் : ஆண்டவன் நடத்திடுவாண்டா குழு: ஹோய் ஹோய் ஹோய் ஆண் : அருணாச்சலம் நடத்திடுவாண்டா குழு: ஹோய் ஹோய் ஹோய் ஆண்: நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா ஆண் : அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
Song information
படம்: அருணாச்சலம் (1997)
இசை: தேவா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
Album: அருணாச்சலம்
Explore this song
- Film / album: அருணாச்சலம்
- Composer: தேவா
- Lyricist: வைரமுத்து
- Actor: ரஜினிகாந்த்
- Actor: சௌந்தர்யா
- Actor: ரம்பா
- Actor: மனோரமா
- Actor: வடிவுக்கரசி
- Actor: ஜெய்சங்கர்
- Actor: ரவிச்சந்திரன்
- Actor: விசு
- Actor: வி.கே. ராமசாமி
- Actor: நிழல்கள் ரவி
- Actor: கிட்டி
- Actor: ஜனகராஜ்
- Actor: செந்தில்
- Actor: ராஜா
- Actor: வினுசக்கரவர்த்தி
- Actor: கிரேசி மோகன்
- Actor: பொன்னம்பலம்
- Actor: அல்வா வாசு
- Actor: சுவாமினாதன்
- Actor: வெண்ணிற ஆடை நிர்மலா
- Actor: சுந்தர் சி