Roman script
Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music by : G. V. Prakash Kumar Female Part Yaarivano enthan Mounam kalaithaan Yaarivano ennul Kaadhal vidhaithaan Yaarivano innum Ennenna seivaan Puriyaamal thavithen Male Part Hey hey hey hey hey hey… Male Part Mudhal paarvai kaadhalai Idhaya kootil thekinen Athan baaram thaangiyae Nagara naatkal pokkinen Male Part Unai kaanum bothuthaan Uyirin thevai kaangiren Unai neengum bothu thaan Ninaivae thevai engiren…yee enn Female Part Yaarivano yaarivano Pagalil vanthaanae Enthan imaigalilae Mayil iragaal thottu sendraanae Yaarivano yaarivano Iravil vanthaanae Enthan vizhigalilae Kanavugalai nattu sendraanae Female Part Yaarivano enthan Mounam kalaithaan Yaarivano ennul Kaadhal vidhaithaan Yaarivano innum Ennenna seivaan Puriyaamal thavithen Chorus ……………………… Female Part Theriyamal enai theendi Oru bodhai kolgindraan Thadumaarum oru saakkil Enai mutti selgindraan Female Part Muraiyilla kadhaiyellam Kurumbaaga solgindraan
Rasithenaa muraithenaa Ena paarthu selgindraan Male Part Poli vedam podum pennae Unthan mugathirai udaithu vidu Intha iravum kalaiyum munnae Enthan kaiyil kidaithu vidu Female Part Yaarivano enthan Mounam kalaithaan Yaarivano ennul Kaadhal vidhaithaan Yaarivano innum Ennenna seivaan Puriyaamal thavithen Chorus …………………… Female Part Alai polae ezhugindren Avan kaanum nerathil Elai polae vizhugindren Mudivilla aazhathil Female Part Alavaaga sirithenae Kannadi bimbathil Avan polae nadithenae Athil veikum muthathil Male Part Hey binbam kooda Norungidum pennae Unthan muthathin irukathilae Namba villai ithuvarai idhayam Neeyum kaadhal kirakathilae Male Part ……………………… Male Part Ooo mudhal paarvai kaadhalai Idhaya kootil thekinen Athan baaram thaangiyae Nagara naatkal pokkinen Male Part Unai kaanum bothuthaan Uyirin thevai kaangiren Unai neengum bothu thaan Ninaivae thevai engiren…ooooo Aaaa….aaa….. Female Part ……………………….
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : யார் இவனோ எந்தன் மௌனம் கலைத்தான் யார் இவனோ என்னுள் காதல் விதைதான் யார் இவனோ இன்னும் என்னென்ன செய்வான் புரியாமல் தவித்தேன் ஆண் : ஹே ஹே ஹே.... ஆண் : முதல் பார்வை காதலை இதய கூட்டில் தேக்கினேன் அதன் பாரம் தாங்கியே நகர நாட்கள் போக்கினேன் ஆண் : உன்னை காணும் போதுதான் உயிரின் தேவை காண்கிறேன் உன்னை நீங்கும் போதுதான் நினைவே தேவை என்கிறேன் பெண் : யார் இவனோ யார் இவனோ பகலில் வந்தானே எந்தன் இமைகளிலே மயிலிறகால் தொட்டு சென்றானே பெண் : யார் இவனோ யார் இவனோ இரவில் வந்தானே எந்தன் விழிகளிலே கனவுகளை நட்டு சென்றானே பெண் : யார் இவனோ எந்தன் மௌனம் கலைத்தான் யார் இவனோ என்னுள் காதல் விதைதான் யார் இவனோ இன்னும் என்னென்ன செய்வான் புரியாமல் தவித்தேன் குழு : ......................... பெண் : தெரியாமல் எனை தீண்டி ஒரு போதை கொள்கின்றான் தடுமாறும் ஒரு சாக்கில் எனை முட்டி செல்கின்றான் பெண் : முறையில்ல கதை எல்லாம் குறும்பாக சொல்கின்றான் ரசித்தேனா முறைத்தேனா என பார்த்து செல்கின்றான் ஆண் : போலி வேடம் போடும் பெண்ணே உந்தன் முகத்திரை உடைத்துவிடு இந்த இரவும் கரையும் முன்னே எந்தன் கையில் கிடைத்துவிடு பெண் : யார் இவனோ எந்தன் மௌனம் கலைத்தான் யார் இவனோ என்னுள் காதல் விதைதான் யார் இவனோ இன்னும் என்னென்ன செய்வான் புரியாமல் தவித்தேன் குழு : ..................... பெண் : அலை போலே எழுகின்றேன் அவன் காணும் நேரத்தில் இல்லை போலே விழுகின்றேன் முடிவில்லா ஆழத்தில் அளவாக சிரித்தேனே கண்ணாடி பிம்பத்தில் அவன் போலே நடித்தேனே அதில் வைக்கும் முத்தத்தில் ஆண் : ஹே பிம்பம் கூட நொறுங்கிடும் பெண்ணே உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே நம்பவில்லை இதுவரை இதயம் நீயும் காதல் கிறக்கத்திலே ஆண் : ......................... ஆண் : ஓஒ....முதல் பார்வை காதலை இதய கூட்டில் தேக்கினேன் அதன் பாரம் தாங்கியே நகர நாட்கள் போக்கினேன் ஆண் : உன்னை காணும் போதுதான் உயிரின் தேவை காண்கிறேன் உன்னை நீங்கும் போதுதான் நினைவே தேவை என்கிறேன் பெண் : ............................
Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Music by: G. V. Prakash Kumar
Release information: From Naan Rajavaga Pogiren (2013) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Naan Rajavaga Pogiren
- Composer: G. V. Prakash Kumar