Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Rajan Nagendra Male Part Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Female Part Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Male Part Kalyaanam kadavul seyal Female : Kanneerum avan seyalae Both : Nadandhadhu marappadhu nalladhammaa Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi…ahaa haa Female Part Seethaikkum thunbam undu Raadhaikkum thunbam undu Eppodhum thaangi kondaal Ellorkkum maenmai undu Male Part ………………………. Aasaigal kodi undu Aanaalum ellai undu Paadhaigal nooru undu Payanangal veru veru Both : Payanangal veru veru Male Part Adadadadadadada ahaa… Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Male Part Aiyaavum Female : Ammaavum Both : Onnaaga koodunga kannaaga vaazhunga
Anbaaga panbaaga Serndhu nadappadhu samsaaram Serndhu padippadhu sangeetham Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi ohoo ooo Male Part Mysooril thangam undu Malainaattil rubber undu Engengae enna undo Adhiledhaan vaazhkkai undu Female Part Aaa…..aaa…..aaa….aaa…. Male : Haiyo haiyo haiyoo haiyoo Female Part Yedhedho ennam kondu Ennaalum sandaiyittaal Vaadhaada neram pogum Vaazhvukku neram edhu Both : Vaazhvukku neram edhu Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi hoo oo Female Part Thanneeril neendhum meenai Tharaimeedhu podalaamaa Pennaaga vandha pinnae Pirivaagi vaazhalaamaa Male Part Pendaatti aasai kondaal Kondaada neram vendum Ennaalum velai endraal Engaedhaan thaaram selvaal Both : Engaedhaan thaaram selvaal Both : Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Engengum poraattandhaan
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திர ஆண் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் பெண் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் ஆண் : கல்யாணம் கடவுள் செயல் பெண் : கண்ணீரும் அவன் செயலே இருவர் : நடந்தது மறப்பது நல்லதம்மா இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி.....அஹஹா... பெண் : சீதைக்கும் துன்பம் உண்டு ராதைக்கும் துன்பம் உண்டு எப்போதும் தாங்கிக் கொண்டால் எல்லோர்க்கும் மேன்மை உண்டு ஆண் : ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ... ஒரேரீ... ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ... ஆசைகள் கோடி உண்டு ஆனாலும் எல்லை உண்டு பாதைகள் நூறு உண்டு பயணங்கள் வேறு வேறு இருவர் : பயணங்கள் வேறு வேறு ஆண் : அடடட டடடட ஆஹா...... இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் ஆண் : அய்யாவும் பெண் : அம்மாவும் இருவர் : ஒண்ணாக கூடுங்க கண்ணாக வாழுங்க அன்பாக.....பண்பாக.... சேர்ந்து நடப்பது சம்சாரம் சேர்ந்து படிப்பது சங்கீதம் இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி... ஓஹோ.....ஓஒ ஆண் : மைசூரில் தங்கம் உண்டு மலநாட்டில் ரப்பர் உண்டு அங்கங்கே என்ன உண்டோ அதிலேதான் வாழ்க்கை உண்டு பெண் : ஆ......ஆ......ஆ......ஆ... ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ . பெண் : ஏதேதோ எண்ணம் கொண்டு எந்நாளும் சண்டை இட்டால் வாதாட நேரம் போகும் வாழ்வுக்கு நேரம் ஏது இருவர் : வாழ்வுக்கு நேரம் ஏது இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி......ஹோ ஓ பெண் : தண்ணீரில் நீந்தும் மீனை தரை மீது போடலாமா பெண்ணாக வந்த பின்னே பிரிவாகி வாழலாமா ஆண் : பெண்டாட்டி ஆசை கொண்டால் கொண்டாட நேரம் வேண்டும் எந்நாளும் வேலை என்றால் எங்கேதான் தாரம் செல்வாள் இருவர் : எங்கேதான் தாரம் செல்வாள் இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் எங்கெங்கும் போராட்டம்தான்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Rajan Nagendra
Release information: From Veettuku Veedu Vasapadi (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Veettuku Veedu Vasapadi
- Composer: Rajan Nagendra