Roman script
Singer : B. Vasantha Music by : Kunnakadi Vaidyanathan Female Part Vasanthavizha nalla vasanthavizha Vasanthavizha nalla vasanthavizha Kaadhal varam ketkkum Kanniyarkku sirantha vizha Kaadhal varam ketkkum Kanniyarkku sirantha vizha Vasanthavizha nalla vasanthavizha aa aa aa Female Part Ilamai vizha indru inimai vizha Nenjam ezhilodu vilayaadum thiruvizha Thendral pattu vannam thottu mugam paarkalaam Naanappattu vaazhvaithottu sugam serkalaam Thunai thedalaam suvai kaanalaam Thunai thedalaam suvai kaanalaam Both : Vasanthavizha nalla vasanthavizha aa aa aa Female Part Maega karungkuzhal muthirai ponnudal Minnal varaigindra sithiramaai Female : Minnal varaigindra sithiramaai Female : Velvizhi paarvaiyum sevidazh ppovaiyum Seethanam thanthidum pakkuvamaai Female : Seethanam thanthidum pakkuvamaai Female Part Mella mella nadanthu Palliarai adainthu Uyiril kalanthu ulagai marakkum Aarambam eppadiyoo Andha uravil malarum Paruva kodiyil Aanandham epapdiyoo Both : Andha aanandham eppadiyoo Vasanthavizha nalla vasanthavizha aa aa aa Female Part Endhan kannum idathu thozhum Thudippadhenna thozhi Female Part Indha naalil oru nanmai ungalai Thedi vanthidum devi Female Part Yaedho ondru manadhil vanthu Vaatuvadhennadi thozhi Female Part Ilamai vanthavudan kaadhal yaekkam vandhae theerum devi Female Part Iravinil thookkam varavillaiyae Adhu yaeno solladi thozhi Female Part Ungal idhayathil oruvan pugunthiruppaan Adhai avanidam kelungal devi Female Part Kanavilum avanai kandathillaiyae Ennadi seiven thozhi Female : Kandaal avanai thaniyae azhaithu Thandanai kodungal devi Both : Vasanthavizha nalla vasanthavizha Kaadhal varam ketkkum Kanniyarkku sirantha vizha Vasanthavizha nalla vasanthavizha aa aa aa
தமிழ்
பாடகி : பி. வசந்தா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் பெண் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா வசந்தவிழா நல்ல வசந்தவிழா காதல் வரம் கேட்கும் கன்னியர்க்கு சிறந்த விழா காதல் வரம் கேட்கும் கன்னியர்க்கு சிறந்த விழா வசந்தவிழா நல்ல வசந்தவிழா பெண் : இளமை விழா இன்று இனிமை விழா நெஞ்சம் எழிலோடு விளையாடும் திருவிழா தென்றல் பட்டு வண்ணம் தொட்டு முகம் பார்க்கலாம் நாணப்பட்டு வாழ்வைத்தொட்டு சுகம் சேர்க்கலாம் துணை தேடலாம் சுவை காணலாம் துணை தேடலாம் சுவை காணலாம் இருவர் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ.....ஆ.....ஆ.... பெண் : மேகக் கருங்குழல் முத்திரை பொன்னுடல் மின்னல் வரைகின்ற சித்திரமாய் பெண் : மின்னல் வரைகின்ற சித்திரமாய் பெண் : வேல்விழி பார்வையும் செவ்விதழ் பூவையும் சீதனம் தந்திடும் பக்குவமாய் பெண் : சீதனம் தந்திடும் பக்குவமாய் பெண் : மெல்ல மெல்ல நடந்து பள்ளியறை அடைந்து உயிரில் கலந்து உலகை மறக்கும் ஆரம்பம் எப்படியோ அந்த உறவில் மலரும் பருவக் கொடியில் ஆனந்தம் எப்படியோ இருவர் : அந்த ஆனந்தம் எப்படியோ வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ.....ஆ.....ஆ.... பெண் : எந்தன் கண்ணும் இடது தோளும் துடிப்பதென்னடி தோழி பெண் : இந்த நாளில் ஒரு நன்மை உங்களை தேடி வந்திடும் தேவி பெண் : ஏதோ ஒன்று மனதில் வந்து வாட்டுவதென்னடி தோழி பெண் : இளமை வந்தவுடன் காதல் ஏக்கம் வந்தே தீரும் தேவி பெண் : இரவினில் தூக்கம் வரவில்லையே அது ஏனோ சொல்லடி தோழி பெண் : உங்கள் இதயத்தில் ஒருவன் புகுந்திருப்பான் அதை அவனிடம் கேளுங்கள் தேவி பெண் : கனவிலும் அவனை கண்டதில்லையே என்னடி செய்வேன் தோழி பெண் : கண்டால் அவனை தனியே அழைத்து தண்டனை கொடுங்கள் தேவி இருவர் : வசந்தவிழா நல்ல வசந்தவிழா காதல் வரம் கேட்கும் கன்னியர்க்கு சிறந்த விழா வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ.....ஆ....ஆ....
Song information
Singer: B. Vasantha
Music by: Kunnakadi Vaidyanathan
Release information: From Thirumalai Deivam (1973) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: B. Vasantha
- Film / album: Thirumalai Deivam
- Composer: Kunnakadi Vaidyanathan