Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : M. S. Vishwanathan Male Part Panathukko paal mayakkam Pasitharvkko koozh mayakkam Gunathukko kaalamellaam Kuraiyadha madhi mayakkam Male Part Mayakkam thelindhavargal Manadhaara ondru pattar Vidhi mayakkam theeradhoo Veedondru amaiyaadhoo Male Part Vaanam boomi naduvinil ulagam Vaazhbavarkellaam naangu suvargal Vaanam boomi naduvinil ulagam Vaazhbavarkellaam naangu suvargal Male Part Pirakkum bodhu manidhargal ondru Valarum bodhu maaruvadhundu Kaalam neram soozhnilaiyaalae Kalvan valarnthaan boomiyin melae Chorus : .………………………. Male Part Vaanam boomi naduvinil ulagam Vaazhbavarkellaam naangu suvargal Male Part Vayiru pasithaal nallavan thirudan Vaazhvai izhandhaal maedhaiyum kurudan Irandu vargam irukkum varaikkum Irandu gunangalum irundhae theerum Chorus ……………………… Whistling : ……………………… Male Part Vaanam boomi naduvinil ulagam Vaazhbavarkellaam naangu suvargal Chorus ……………………….. Male Part Manidhan vaazhkai megangal polae Samuga vaazhvoo sakkaram polae Sendra kaalam anubhavam aagum Serum neram olimayamaagum
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பணத்துக்கோ பால் மயக்கம் பசித்தவர்க்கோ கூழ் மயக்கம் குணத்துக்கோ காலமெல்லாம் குறையாத மதி மயக்கம் ஆண் : மயக்கம் தெளிந்தவர்கள் மனதார ஒன்று பட்டார் விதி மயக்கம் தீராதோ வீடொன்று அமையாதோ..... ஆண் : வானம் பூமி நடுவினில் உலகம் வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள் வானம் பூமி நடுவினில் உலகம் வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள் ஆண் : பிறக்கும்போது மனிதர்கள் ஒன்று வளரும்போது மாறுவதுண்டு காலம் நேரம் சூழ்நிலையாலே கள்வன் வந்தான் பூமியின் மேலே குழு : .................................. ஆண் : வானம் பூமி நடுவினில் உலகம் வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள் ஆண் : வயிறு பசித்தால் நல்லவன் திருடன் வாழ்வை இழந்தால் மேதையும் குருடன் இரண்டு வர்க்கம் இருக்கும் வரைக்கும் இரண்டு குணங்களும் இருந்தே தீரும்..... குழு : ................................ விசில் : ...................................... ஆண் : வானம் பூமி நடுவினில் உலகம் வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள் குழு : ............................... ஆண் : மனிதன் வாழ்க்கை மேகங்கள் போலே சமூக வாழ்வோ சக்கரம் போலே சென்ற காலம் அனுபவமாகும் சேரும் நேரம் ஒளிமயமாகும்.......
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Naangu Suvargal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Naangu Suvargal
- Composer: M. S. Vishwanathan