Roman script

Singers : Sruthi S and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Whistling : ………………………….

Male Part

Unnai unnai unnai

Kadal alavu nesikkiren

Malai alavu verukkiren…(Dialogue)

Male Part

Unnai unnai

Unnai thavira veredhuvum illai

Idhai unnidam naan

Oththu kolvadhaa… illai….

Female Part

Thanimai thanimai

Thanimai indri veredhuvum illai

Idhai unnidam naan

Oththu kolla ne yogan illai

Male Part

Endha nerathil

Engu nindraal

Chorus : Nee varuvaai

Male : Endru enakku theriyum

Chorus : Aanal nirpathaayillai

Female Part

Endha saalaiyil

Engu thirumbinaal

Chorus : Un veedu varum

Female : Endru enakku theriyum

Chorus : Aanaal varuvadhaayillai

Male Part

Ninaitha nodiyil

Ninaitha padiyae

Un kuralai ennaal

Ketka mudiyum

Aanaal ketpadhaayillai

Male Part

Nee sirthu mayakkum

Muganool padangalukku

En aanmaavilirundhu

Araivari edhuthu

Ezhudhinaal podhum

Nee like seivaai

Male Part

Aanaal naan

Ezhudhuvathaaiyillai

Male Part

Unnai kadal alavu

Naan nesikkiren

Unnai malai alavu

Naan verukkiren

Male Part

Pasuthol porthiya

Puli neeya..

Illai naaana…(Dialogue)

தமிழ்

பாடகர்கள் : ஸ்ருதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உன்னை உன்னை உன்னை

கடலளவு நேசிக்கிறேன்

மலையளவு வெறுக்கிறேன்

ஆண் : உன்னை உன்னை

உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை

இது உன்னிடம் நான்

ஒத்துக்கொள்வதாய் இல்லை

பெண் : தனிமை தனிமை

தனிமை இன்றி வேறெதுவும் இல்லை

இது உன்னிடம் நான்

ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை

ஆண் : எந்த நேரத்தில் எங்கு நின்றால்

நீ வருவாய்

என்று எனக்குத் தெரியும்

ஆனால் நிற்பதாய் இல்லை

பெண் : எந்த சாலையில் எங்கு திரும்பினால்

உன் வீடு வரும்

என்று எனக்குத்தெரியும்

ஆனால் வருவதாய் இல்லை

ஆண் : நினைத்த நொடியில்

நினைத்தபடியே

உன் குரலை என்னால்

கேட்கவும் முடியும்

ஆனால் கேட்பதாய் இல்லை

ஆண் : நீ சிரித்து மயக்கும்

முகநூல் படங்களுக்கு

என் ஆன்மாவில் இருந்து

அரைவரி எடுத்து

எழுதினால் போதும்

நீ லைக் செய்வாய்

ஆனால் நான் எழுதுவதாய் இல்லை

ஆண் : உன்னை கடலளவு

நான் நேசிக்கிறேன்

உன்னை மலையளவு

நான் வெறுக்கிறேன்

ஆண் : பசு தோல் போர்த்திய

புலி... நீயா ...

இல்லை ..நானா...

Song information

Singers: Sruthi S and Yuvan Shankar Raja

Music by: Yuvan Shankar Raja

Release information: From Taramani (2017) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song