Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Thoongathae thambi thoongathae

Neeyum somberi endra peyar vaangathae

Thoongathae thambi thoongathae

Somberi endra peyar vaangathae

Thoongathae thambi thoongathae

Male Part

{Nee thaangiya

Udaiyum aayuthamum

Pala sariththira kadhai sollum

Siraikkathavum} (2)

Male Part

{Sakthi irunthaal

Unaikkandu sirikkum} (2)

Sathiram thaan unaku

Idam kodukkum

Male Part

Thoongathae thambi thoongathae

Somberi endra peyar vaangathae

Thoongathae thambi thoongathae

Male Part

{Nalla pozhuthai ellaam

Thoongi keduththavargal

Naattai keduthathudan

Thaanum kettar} (2)

Male Part

Silar allum pagalum

Theru kallaai irunthu vittu

Athirshtam illai

Endru alattikkondaar

Allum pagalum

Theru kallaai irunthu vittu

Athirshtam illai

Endru alattikkondaar

Male Part

Vizhithu kondorellaam

Pizhaithu kondaar

Aah..ahh…aa..aahh..aaah

Aah..aaa.. aahh..aahh..

Vizhithu kondorellaam

Pizhaithu kondaar

Unpol kurattai vittorellaam

Kottai vittar

Male Part

Thoongathae thambi thoongathae

Somberi endra peyar vaangathae

Thoongathae thambi thoongathae

Male Part

{Por padaithanil thoongiyavan

Vetri izhanthaan} (2)

Uyar palliyil thoongiyavan

Kalvi izhanthaan

Male Part

Kadaithanil thoongiyavan

Muthal izhanthaan

Konda kadamaiyil thoongiyavan

Pugazh izhanthaan..

Male Part

Innum poruppulla

Manitharin thookathinaal

Palaponaana velaiyellaam

Thoonguthappa

Male Part

Thoongathae thambi thoongathae

Somberi endra peyar vaangathae

Thoongathae thambi thoongathae

Thambi thoongathae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :

எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே

நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே

ஆண் : {நீ தாங்கிய

உடையும் ஆயுதமும்

பல சரித்திர கதை சொல்லும்

சிறைக்கதவும்} (2)

ஆண் : {சக்தி இருந்தால்

உனைக்கண்டு சிரிக்கும்} (2)

சத்திரம்தான் உனக்கு

இடம் கொடுக்கும்

ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே

ஆண் : {நல்ல பொழுதையெல்லாம்

தூங்கி கெடுத்தவர்கள்

நாட்டை கெடுத்ததுடன்

தானும்கெட்டார்} (2)

ஆண் : சிலர் அல்லும் பகலும்

தெரு கல்லாய் இருந்து விட்டு

அதிர்ஷ்டம் இல்லை

என்று அலட்டிக்கொண்டார்

அல்லும் பகலும்

தெருக் கல்லாய் இருந்து விட்டு

அதிர்ஷ்டம் இல்லை

என்று அலட்டிக்கொண்டார்

ஆண் : விழித்துக் கொண்டோரெல்லாம்

பிழைத்துக் கொண்டார்

ஆ....ஆ... ஆ.ஆ.....ஆ..

ஆ... ஆ.. ஆ......ஆ.....ஆ..

விழித்துக் கொண்டோரெல்லாம்

பிழைத்துக் கொண்டார்

உன்போல்

குறட்டை விட்டோரெல்லாம்

கோட்டைவிட்டார்

ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே

ஆண் : {போர் படைதனில் தூங்கியவன்

வெற்றி இழந்தான்} (2)

உயர்பள்ளியில் தூங்கியவன்

கல்வி இழந்தான்

ஆண் : கடைதனில் தூங்கியவன்

முதலிழந்தான்

கொண்ட கடமையில் தூங்கியவன்

புகழ் இழந்தான்..

ஆண் : இன்னும் பொறுப்புள்ள

மனிதரின் தூக்கத்தினால்

பலபொன்னான வேலையெல்லாம்

தூங்குதப்பா

ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே

தம்பி தூங்காதே

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song