Roman script
Singer : P. Bhanumathi Music by : G. Ramanathan and C. R. Subbaraman Female Part Thirumaalin kausthubamsaer Thirumaarbaga pettagathul thigazhndhaai Perumozhi pettredutha pennarasi Sengamala peedam vaazhndhaai Urumaara cheiyum kodiya Varumaiyara navanidhiyum Ulanganindhu tharummaadhaa Unaiyandri thaaraniyil Yevarthaayae dheivam neeyae neeyae Female Part Unnarulaal ulaginbamayam Unnarulaal manam inbamigum sendhiru Unnarulaal ulaginbamayam Unnarulaal manam inbamigum Unnarulaal malar manamum perumae Unadharulaal thendral Sugam tharumae ambaa Unnarulaal ulaginbamayam Unnarulaal manam inbamigum Unnarulae naan paaduvadhum Kondaaduvadhum Unadharulae en ullam naaduvadhum Kai kooduvadhum ambaa Unnarulaal ulaginbamayam Unnarulaal manam inbamigum
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் பெண் : திருமாலின் கௌஸ்துபம்சேர் திருமார்பகப் பெட்டகத்துள் திகழ்ந்தாய் பெருமொழி பெற்றெடுத்த பெண்ணரசி செங்கமலப் பீடம் வாழ்ந்தாய் உருமாறச் செய்யும் கொடிய வறுமையற நவநிதியும் உளங்கனிந்து தரும்மாதா உனையன்றி தாரணியில் எவர்தாயே தெய்வம் நீயே நீயே பெண் : உன்னருளால் உலகின்பமயம் உன்னருளால் மனம் இன்பமிகும் செந்திரு உன்னருளால் உலகின்பமயம் உன்னருளால் மனம் இன்பமிகும் உன்னருளால் மலர் மணமும் பெறுமே உனதருளால் தென்றல் சுகம் தருமே அம்பா உன்னருளால் உலகின்பமயம் உன்னருளால் மனம் இன்பமிகும் உன்னருளே நான் பாடுவதும் கொண்டாடுவதும் உனதருளே என் உள்ளம் நாடுவதும் கை கூடுவதும் அம்பா உன்னருளால் உலகின்பமயம் உன்னருளால் மனம் இன்பமிகும்
Song information
Singer: P. Bhanumathi
Music by: G. Ramanathan and C. R. Subbaraman
Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Rathna Kumar
- Composer: G. Ramanathan and C. R. Subbaraman