Roman script

Singers : A. L. Raghavan and S. Janaki

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Thingalukku enna indru thirumanamo

Thingalukku enna indru thirumanamo

Suttri thirigindra thaaragai seedhanamo

Pongi varum alaigalil mudhaliravo

Vanna poovodu maavilai thoranamo oh oh oh oh

Female Part

Thingalukkum ungalukkum pudhu uravo

Ummai thaediyae vandhaval pazhangadhaiyo

Ingirukkum ennam innum vilangalaiyo

Indru yengidum naan enna uravillaiyo

Yengidum naan enna uravillaiyo

Thingalukkum ungalukkum pudhu uravo oh oh oh oh

Male Part

Andha thingalukkum unakkitta peyarillaiyo

Nuraip pongidum alai undhan kuzhal allavo

Naan thangidum idam undhan manam allavo

Ena thaniyana pirippadhu pizhaiyillaiyo

Female Part

Indha kanniyin peyar enna azhaghillaiyo

Adhu kaadhinil thaenena vizhavillaiyo

Indha kanniyin peyar enna azhaghillaiyo

Adhu kaadhinil thaenena vizhavillaiyo

Andha thingalin peyarenna sirandhadhuvo

Indha nangaiyin meedhoru kalangamundo

Indha nangaiyin meedhoru kalangamundo oh oh oh oh

Male Part

Varum kobamum kunguma kolamidum

Kaal povadhu pol sendru thirumbividum

Manam aayiram por vagai nadathi vidum

Idhu aarambham dhaan andha noi allavo

Female Part

Imai vizhiyai moodum varai thirandhirukkum

Adhil ilamai koluvaeri maghizhndhirukkum

Idhazh kanindhum kaniyaamal kuvindhirukkum

Idhai kaadhal enbaargal saridhaano

Idhai kaadhal enbaargal saridhaano oh oh oh oh

Male Part

Thingalukku enna indru thirumanamo

Female Part

Suttri thirigindra thaaragai seedhanamo

Male Part

Pongi varum alaigalil mudhaliravo

Female Part

Vanna poovodu maavilai thoranamo oh oh oh oh

Both : Thingalukku enna indru thirumanamo oh oh oh oh

Hoo oooo ooo oooo

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ

பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ

வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ ஓ ஓ ஓ ஓ

பெண் : திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ

உம்மை தேடியே வந்தவள் பழங்கதையோ

இங்கிருக்கும் எண்ணம் இன்னும் விளங்கலையோ

இன்று ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ

ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ

திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ ஓ ஓ ஓ ஓ

ஆண் : அந்த திங்களும் உனக்கிட்ட பெயரல்லவோ

நுரைப் பொங்கிடும் அலை உந்தன் குழல் அல்லவோ

நான் தங்கிடும் இடம் உந்தன் மனம் அல்லவோ

எனைத் தனியென பிரிப்பது பிழையல்லவோ

பெண் : இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ

அது காதினில் தேனென விழவில்லயோ

இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ

அது காதினில் தேனென விழவில்லயோ

அந்த திங்களின் பெயரென்ன சிறந்ததுவோ

இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ...

இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ.....ஓ ஓ ஓ ஓ

ஆண் : வரும் கோபமும் குங்குமக் கோலமிடும்

கால் போவது போல் சென்று திரும்பிவிடும்

மனம் ஆயிரம் போர் வகை நடத்தி விடும்

இது ஆரம்பம்தான் அந்த நோய் அல்லவோ

பெண் : இமை விழியை மூடும் வரை திறந்திருக்கும்

அதில் இளமை கொலுவேறி மகிழ்ந்திருக்கும்

இதழ் கனிந்தும் கனியாமல் குவிந்திருக்கும்

இதை காதல் என்பார்கள் சரிதானோ

இதை காதல் என்பார்கள் சரிதானோ ஓ ஓ ஓ ஓ

ஆண் : திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

பெண் : சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ

ஆண் : பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ

பெண் : வண்ணப் பூவோடு மாவிலை

தோரணமோ ஓ ஓ ஓ ஓ

இருவர் : திங்களுக்கு என்ன இன்று

திருமணமோ ஓ ஓ ஓ ஓ

ஹோ ஓஒ ஓஒ ஓஓ

Song information

Singers: A. L. Raghavan and S. Janaki

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Poojaikku Vandha Malar (1965) · Lyricist: Vaali

Explore this song