Roman script
Singers : G. V. Prakash Kumar and Yamini Ghantasala Music by : G. V. Prakash Kumar Lyrics by : Na. Muthu Kumar Chorus Thigatta thigatta thigatta Thigatta kaadhalippom Male Part Hey hey hey hehehe hehe hey hey..(2) Male Part Ilaigal thoongum iravil Vizhigal vinmeenaaga Male Part Anilgal aadum mundril Viralgal veenai aaga Male Part Hey hey hey hehehe hehe hey hey.. Male Part O iragai pole Un Kural paranthu Megathai mella urasa Megam kanindha Mazhai naal ondril Kaadhal kavithai kirukka Male Part Mazhai veyil vaasam kalandhu Maarbinil oorugiraai Maaya kadhavin pinnirunthu Kaadhal kanavinai pesugirai Male Part {Thaane thanne thaane thanne Thaane thanne thaane Thaane thanne thaane thanne Thanenane thaane} (2) Chorus Thigatta thigatta thigatta Thigatta kaadhalippom Female Part Theera pasiyudan Erumbena thirigiraai Endhan unarvinilae Orayiram iravai urangaadhu Thingiraai kanavilae Male Part Yea yea yea ho Both : Imaigalai mooduven Vizhikullum iranguvaai Karuvizhi theduven Kanavilum uranguvaai Male Part Thanenane thananane nanane…(4) Both : Thalaikothi kalaippatharkkum Thalai thol mel saaippatharkum Madi sernthu kolvatharkum Yaathum nee aaginaai Both : Thalaikothi kalaippatharkkum Thalai thol mel saaippatharkum Madi sernthu kolvatharkum Thikatta thikatta kaadhalippom Male Part Endro partha Pugaippada nyabagam Nee en vizhiyinilae Engo keta pudhu kural paadal Endhan mozhiyinilae Male Part Kaayangal maraikavum Pudhu kaayangal pirakkavum Pen vaasam theriyavum Nee maayangal seigiraai Both : Mazhai peiyum pozhuthellam Un nyabagam varugirathu Un nyabagam varugaiyilae Adaimazhai nenjil pozhigirathae Both : Mazhai peiyum pozhuthellam Un nyabagam varugirathu Adaimazhai nenjil pozhigirathae Thigatta thigatta kaadhalippom Both : {Thaane thanne thaane thanne Thaane thanne thaane Thaane thanne thaane thanne Thanenane thaane} (2) Chorus {Thigatta thigatta thigatta thigatta Thigatta thigatta kaadhalippom} (2)
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் யாமினி கண்டசாலா இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : நா. முத்து குமார் குழு : திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம் ஆண் : ........................... ஆண் : இலைகள் தூங்கும் இரவில் விழிகள் விண்மீனாக ஆண் : அணில்கள் ஆடும் முன்றில் விரல்கள் வீணை ஆக ஆண் : ...................... ஆண் : ஓ இறகை போலே உன் குரல் பறந்து மேகத்தை மெல்ல உரச மேகம் கனிந்த மழை நாள் ஒன்றில் காதல் கவிதை கிறுக்க ஆண் : மழை வெயில் வாசம் கலந்து மார்பில் ஊறுகிறாய் மாய கதவின் பின்னிருந்து காதல் கனவினை பேசுகிறாய் ஆண் : {தானே தன்னே தானே தன்னே தானே தன்னே தானே தானே தன்னே தானே தன்னே தானேனானே தானே} (2) குழு : திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம் பெண் : தீரா பசியுடன் எறும்பென திரிகிறாய் எந்தன் உணர்வினிலே ஓராயிரம் இரவை உறங்காது தின்கிறாய் கனவிலே ஆண் : ஏ ஏ ஏ ஓ.... இருவர் : இமைகளை மூடுவேன் விழிக்குள்ளும் இறங்குவாய் கருவிழி தேடுவேன் கனவிலும் உறங்குவாய் ஆண் : தானேனானே தானேனானே னானானே.. (4) இருவர் : தலைக்கோதி கலைப்பதற்கும் தலை தோள் மேல் சாய்ப்பதற்கும் மடி சேர்ந்து கொள்வதற்கும் யாதும் நீ ஆகினாய் இருவர் : தலைக்கோதி கலைப்பதற்கும் தலை தோள் மேல் சாய்ப்பதற்கும் மடி சேர்ந்து கொள்வதற்கும் திகட்ட திகட்ட காதலிப்போம் ஆண் : என்றோ பார்த்த புகைப்பட ஞாபகம் நீ என் விழியினிலே எங்கோ கேட்ட புது குரல் பாடல் எந்தன் மொழியினிலே ஆண் : காயங்கள் மறைக்கவும் புது காயங்கள் பிறக்கவும் பெண் வாசம் தெரியவும் நீ மாயங்கள் செய்கிறாய் இருவர் : மழை பெய்யும் பொழுதெல்லாம் உன் ஞாபகம் வருகிறது உன் ஞாபகம் வருகையிலே அடைமழை நெஞ்சில் பொழிகிறதே இருவர் : மழை பெய்யும் பொழுதெல்லாம் உன் ஞாபகம் வருகிறது அடைமழை நெஞ்சில் பொழிகிறதே திகட்ட திகட்ட காதலிப்போம் இருவர் : {தானே தன்னே தானே தன்னே தானே தன்னே தானே தானே தன்னே தானே தன்னே தானேனானே தானே} (2) குழு : {திகட்ட திகட்ட திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம்} (2)
Song details
Singers: G. V. Prakash Kumar and Yamini Ghantasala
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Na. Muthu Kumar
Release information: From Aneethi (2022) · Singer: G. V. Prakash Kumar and Yamini Ghantasala · Lyricist: Na. Muthu Kumar · Music: G. V. Prakash Kumar
- Singer: G. V. Prakash Kumar and Yamini Ghantasala
- Film / album: Aneethi
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Na. Muthu Kumar