Roman script
Singers : T. R. Mahalingam and S. C. Krishnan Music by : Viswanathan – Ramamoorthy Male Part Thathuva kalaiyudan vidhagar paniyattrum Sangam valartha thamizhae Thanmaana thamizhagam sanmaanam pettrida Thani pugazh konda thamizhae Male Part Mathaga thimir migum anniyan unaiyae Madhiyaadhu edhir kaalamoo Malaiyodu thalai modhum Mamadhaiyin uruvathai Marainthoda seivaai thamizhae…ae…. Male Part Tharindhina tharindhina thirandhinna Tharindhina tharindhina thirandhinna Male Part Iyal isai naadaga kalaiyaalae Igam meedhil seiyum thiyaagam Idhanaal yaavarum adaivaar mogam Inaindhidum thamizh suvai paaraai Male Part Thannaalae thaan ketta thanthana kalainganae Thalaiyai kanakidaathae Kannaana ilakkiya kaadhaliyai kaanadha Kasadanae kalangidadhae Male Part Annaalilae silar aaga endraarena Agandhaiyaal alaindhidadhae Innaalilae engal iyal isai kalaiyai Nee elithaaga ennidaathae
தமிழ்
பாடகர்கள் : டி . ஆர். மஹாலிங்கம் மற்றும் எஸ். சி . கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : தத்துவக் கலையுடன் வித்தகர் பணியாற்றும் சங்கம் வளர்த்த தமிழே தன்மானத் தமிழகம் சன்மானம் பெற்றிட தனிப் புகழ் கொண்ட தமிழே ஆண் : மத்தகத் திமிர்மிகும் அந்நியன் உன்னையே மதியாது எதிர் காலமோ மலையோடு தலை மோதும் மமதையின் உருவத்தை மறைந்தோட செய்வாய் தமிழே........ ஆண் : தரிந்தின தரிந்தின திரந்தின்னா தரிந்தின தரிந்தின திரந்தின்னா ஆண் : இயல் இசை நாடகக் கலையாலே இகம் மீதில் செய்யும் தியாகம் இதனால் யாவரும் அடைவார் மோகம் இணைந்திடும் தமிழ்ச் சுவை பாராய் ஆண் : தன்னாலே தான்கெட்ட தந்தனாக் கலைஞனே தலையை கனத்திடாதே கண்ணான இலக்கிய காதலியைக் காணாத கசடனே கலங்கிடாதே ஆண் : அந்நாளிலே சிலர் ஆகா என்றார் என அசந்தையால் அலைந்திடாதே இந்நாளில் எங்கள் இயலிசைக் கலையை நீ எளிதாக எண்ணிடாதே.......
Song information
Singers: T. R. Mahalingam and S. C. Krishnan
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Amuthavalli (1959) · Singer: T. R. Mahalingam and S. C. Krishnan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: T. R. Mahalingam and S. C. Krishnan
- Film / album: Amuthavalli
- Composer: Viswanathan – Ramamoorthy