Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Thaanae mulaiththa maram Thaniyaaga valarntha maram Yaen mulaiththendraayo En selvamae Enakkae theriyaathammaa Male Part Thaanae mulaiththa maram Thaniyaaga valarntha maram Yaen mulaiththendraayo En selvamae Enakkae theriyaathammaa Male Part Aasai ennum kaattukullae Paathi vazhi ponavargal Aasai ennum kaattukullae Paathi vazhi ponavargal Thaan seitha paavam ammaa en selvamae Naan seitha paavam illai Male Part Paal kudiththa paasam illai Palli sendra paadam illai Paal kudiththa paasam illai Palli sendra paadam illai Oorukku naan yaarammaa En selvamae uravukku nee yaarammaa Male Part Thaanae mulaiththa maram Thaniyaaga valarntha maram Yaen mulaiththendraayo En selvamae Enakkae theriyaathammaa Male Part Kallukkum nenjam undu Kann undu kanneer undu Kallukkum nenjam undu Kann undu kanneer undu Sonnaval neethaanammaa en deivathai Unnidam kandaenammaa Male Part Thottiyil vaazhntha pillai Thottilil vaazhnthathillai Thottiyil vaazhntha pillai Thottilil vaazhnthathillai Appanendru azhaiththaayammaa Adhil en karpanai valarththaayammaa Male Part Anbendrum aasaiyendrum Panpendrum paasamendrum Sonnathai kettaenammaa Adhai naan sorkaththil kaanbenammaa sorkaththil kaanbenammaa Male Part Thaanae mulaiththa maram Thaniyaaga valarntha maram Yaen mulaiththendraayo En selvamae Enakkae theriyaathammaa Male Part Aariraariro aariraariro Aariraariro aariraariro….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம் ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே...... எனக்கே தெரியாதம்மா ஆண் : தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம் ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே...... எனக்கே தெரியாதம்மா ஆண் : ஆசை என்னும் காட்டுக்குள்ளே பாதி வழி போனவர்கள் ஆசை என்னும் காட்டுக்குள்ளே பாதி வழி போனவர்கள் தான் செய்த பாவம் அம்மா என் செல்வமே நான் செய்த பாவம் இல்லை ஆண் : பால் குடித்த பாசம் இல்லை பள்ளி சென்ற பாடம் இல்லை பால் குடித்த பாசம் இல்லை பள்ளி சென்ற பாடம் இல்லை ஊருக்கு நான் யாரம்மா என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா ஆண் : தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம் ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே.. எனக்கே தெரியாதம்மா ஆண் : கல்லுக்கும் நெஞ்சம் உண்டு கண் உண்டு கண்ணீர் உண்டு கல்லுக்கும் நெஞ்சம் உண்டு கண் உண்டு கண்ணீர் உண்டு சொன்னவள் நீதானம்மா என் தெய்வத்தை உன்னிடம் கண்டேனம்மா ஆண் : தொட்டியில் வாழ்ந்த பிள்ளை தொட்டிலில் வாழ்ந்ததில்லை தொட்டியில் வாழ்ந்த பிள்ளை தொட்டிலில் வாழ்ந்ததில்லை அப்பனென்று அழைத்தாயம்மா அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா ஆண் : அன்பென்றும் ஆசையென்றும் பண்பென்றும் பாசமென்றும் சொன்னதைக் கேட்டேனம்மா அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா சொர்க்கத்தில் காண்பேனம்மா ஆண் : தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம் ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே.. எனக்கே தெரியாதம்மா ஆண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிராரிரோ
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Itho Enthan Deivam (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Itho Enthan Deivam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan