Roman script
Singers : P. Susheela, A. P. Komala and S. Varalakshmi Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Takku takku Takku takku Takku takku takkunnu adikkadi thudikkum Adikkadi thudikkum adi pennae Nikkira idathilaeyae vandu pola suthi suthi Sakkaram adikkum kadikaram alla Takku takku Takku takku takkunnu adikkadi thudikkum Adikkadi thudikkum adi pennae Female Part Methaiyila padutha kooda nithirai verukkum Nithirai verukkumadi kannae Endhan vaithiyaru pathiyam kodutha podhum Pasikka marakkum adhu noiyum alla Takku takku Takku takku takkunnu adikkadi thudikkum Adikkadi thudikkum adi pennae Female Part Othai kaalil ninnukittu nithamum thavikkum Nithamum thavikkum adi pennae Kuthi vecha kanniyila ekkachekkamaga vandhu Sikkiyae muzhikkum adhu kokkum alla Female Part Ennavendru nee soladi Adhu ennavendru nee solladi Female Part Kadhal endru nee sollamma Pudhu kaadhal endru nee sollamma Female Part Velanai paadum thiruneeru podum Veedhiyil thoongidum saami alla Velanai paadum thiruneeru podum Veedhiyil thoongidum saami alla Female Part Nall iravu neram veshangal maarum Kollai adithidum kalvan alla Nall iravu neram veshangal maarum Kollai adithidum kalvan alla Female Part Kaanikkai kettaal kathithanai neettum Kaiyaale yeiyaadha karumi alla Kaanikkai kettaal kathithanai neettum Kaiyaale yeiyaadha karumi alla Female Part Anjaadha nadai podum yaanai alla Female : Arasi munn vilaiyaadum maanum alla Female : Anjaadha nadai podum yaanai alla Female : Arasi munn vilaiyaadum maanum alla Female Part Ennavendru nee keladi Female : Ennavendrae neeyum kaelamma Female Part Mannar endrae neeyum solladi Engal mannar endrae neeyum solladi
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா, ஏ. பி. கோமளா மற்றும் எஸ். வரலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும் அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே நிக்கிற இடத்திலேயே வண்டு போல சுத்தி சுத்தி சக்கரம் அடிக்கும் கடிகாரம் அல்ல டக்குடக்கு டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும் அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே பெண் : மெத்தையில் படுத்தா கூட நித்திரை வெறுக்கும் நித்திரை வெறுக்குமடி கண்ணே எத்தன வைத்தியரு பத்தியம் கொடுத்த போதும் பசிக்க மறக்கும் அது நோயும் அல்ல டக்குடக்கு டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும் அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே பெண் : ஒத்தைக் காலில் நின்னுகிட்டு நித்தமும் தவிக்கும் நித்தமும் தவிக்கும் அடி பெண்ணே குத்தி வெச்ச கண்ணியில எக்கச்சக்கமாக வந்து சிக்கியே முழிக்கும் அது கொக்கும் அல்ல பெண் : என்னவென்று நீ சொல்லடி அது என்னவென்று நீ சொல்லடி பெண் : காதல் என்று நீ சொல்லம்மா புதுக் காதல் என்று நீ சொல்லம்மா பெண் : வேலனைப் பாடும் திருநீறு போடும் வீதியில் தூங்கும் சாமி அல்ல வேலனைப் பாடும் திருநீறு போடும் வீதியில் தூங்கும் சாமி அல்ல பெண் : நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும் கொள்ளை அடித்திடும் கள்வன் அல்ல நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும் கொள்ளை அடித்திடும் கள்வன் அல்ல பெண் : காணிக்கை கேட்டால் கத்திதனை நீட்டும் கையாலே எய்யாத கருமி அல்ல காணிக்கை கேட்டால் கத்திதனை நீட்டும் கையாலே எய்யாத கருமி அல்ல பெண் : அஞ்சாத நடை போடும் யானை அல்ல பெண் : அரசி முன் விளையாடும் மானும் அல்ல பெண் : அஞ்சாத நடை போடும் யானை அல்ல பெண் : அரசி முன் விளையாடும் மானும் அல்ல பெண் : என்னவென்றே நீயும் கேளடி பெண் : என்னவென்றே நீயும் கேளம்மா பெண் : மன்னர் என்றே நீயும் சொல்லடி எங்கள் மன்னர் என்றே நீயும் சொல்லடி...
Song information
Singers: P. Susheela, A. P. Komala and S. Varalakshmi
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Veerapandiya Kattabomman (1959) · Singer: P. Susheela, A. P. Komala and S. Varalakshmi · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Singer: A. P. Komala and S. Varalakshmi
- Film / album: Veerapandiya Kattabomman
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam