Roman script

Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Sollu kiliyae…ae….sollu kiliyae….ae….

Sugam pera vazhiyondru nee sollu kiliyae

Sollu kiliyae…ae….sollu kiliyae….ae….

Sugam pera vazhiyondru nee sollu kiliyae

Female Part

Naalaaga konjam naalaga

Nenjil yaedhetho ennam yaedhetho

Naalaaga konjam naalaga

Nenjil yaedhetho ennam yaedhetho

Nalla seithi mella neeyum sollakoodaatho

Female Part

Sollu kiliyae…ae….sollu kiliyae….ae….

Sugam pera vazhiyondru nee sollu kiliyae

Female Part

Raja endraal rajathaan

Paarththaayae neeyum vellaadae

Rani endraal naanaethaan

Koodaathaa sollu kannaalae

Female Part

Yaenammaa senthaazham poovannamae

Enakkum avarkkum poruththam sariyaa

Avar nenjil eppothum en ennamae

Female Part

Sollu kiliyae…ae….sollu kiliyae….ae….

Sugam pera vazhiyondru nee sollu kiliyae

Female Part

Maanae thullum maanae vaa

Maangaattu amman sonnalaa

Naanae sonnaal sarithaanaa

Nammooru pengal solvaaraa

Female Part

Neerodai poongaattru sangeethamae

Nerunga nerunga mayakkam varuthae

Oor paarkka eppothu kalyaanamae

Female Part

Sollu kiliyae…ae….sollu kiliyae….ae….

Sugam pera vazhiyondru nee sollu kiliyae

Female Part

Poovae mullai poovammaa

Nee kooda aasai kondaayaa

Meenae neenthum meenammaa

Nee enna neril paarththaayaa

Female Part

Aalaana naalaaga en nenjamae

Achcham naanam micham meedhi

Ponaalum thavarillai avar vendumae

Female Part

Sollu kiliyae…ae….sollu kiliyae….ae….

Sugam pera vazhiyondru nee sollu kiliyae

Female Part

Naalaaga konjam naalaga

Nenjil yaedhetho ennam yaedhetho

Nalla seithi mella neeyum sollakoodaatho

Female Part

Sollu kiliyae…ae….sollu kiliyae….ae….

Sugam pera vazhiyondru nee sollu kiliyae

தமிழ்

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சொல்லு கிளியே....ஏ......சொல்லு கிளியே...ஏ....

சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே

சொல்லு கிளியே....ஏ......சொல்லு கிளியே...ஏ....

சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே

பெண் : நாளாகக் கொஞ்சம் நாளாக

நெஞ்சில் ஏதேதோ எண்ணம் ஏதேதோ

நாளாகக் கொஞ்சம் நாளாக

நெஞ்சில் ஏதேதோ எண்ணம் ஏதேதோ

நல்ல செய்தி மெல்ல நீயும் சொல்லக்கூடாதோ

பெண் : சொல்லு கிளியே....ஏ......சொல்லு கிளியே...ஏ....

சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே

பெண் : ராஜா என்றால் ராஜாதான்

பார்த்தாயே நீயும் வெள்ளாடே

ராணி என்றால் நானேதான்

கூடாதா சொல்லு கண்ணாலே.....

பெண் : ஏனம்மா செந்தாழம் பூவண்ணமே

எனக்கும் அவர்க்கும் பொருத்தம் சரியா

அவர் நெஞ்சில் எப்போதும் என் எண்ணமே.....

பெண் : சொல்லு கிளியே....ஏ......சொல்லு கிளியே...ஏ....

சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே

பெண் : மானே துள்ளும் மானே வா

மாங்காட்டு அம்மன் சொன்னாளா

நானே சொன்னால் சரிதானா

நம்மூருப் பெண்கள் சொல்வாரா

பெண் : நீரோடை பூங்காற்று சங்கீதமே

நெருங்க நெருங்க மயக்கம் வருதே

ஊர் பார்க்க எப்போது கல்யாணமே....

பெண் : சொல்லு கிளியே....ஏ......சொல்லு கிளியே...ஏ....

சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே

பெண் : பூவே முல்லைப் பூவம்மா

நீ கூட ஆசைக் கொண்டாயா

மீனே நீந்தும் மீனம்மா

நீ என்ன நேரில் பார்த்தாயா

பெண் : ஆளான நாளாக என் நெஞ்சமே

அச்சம் நாணம் மிச்சம் மீதி

போனாலும் தவறில்லை அவர் வேண்டுமே......

பெண் : சொல்லு கிளியே....ஏ......சொல்லு கிளியே...ஏ....

சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே

பெண் : நாளாகக் கொஞ்சம் நாளாக

நெஞ்சில் ஏதேதோ எண்ணம் ஏதேதோ

நல்ல செய்தி மெல்ல நீயும் சொல்லக்கூடாதோ

பெண் : சொல்லு கிளியே....ஏ......சொல்லு கிளியே...ஏ....

சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே

Song information

Singer: S. P. Sailaja

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Ponnazhagi (1981) · Singer: S. P. Sailaja · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song