Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : P. Srinivasan

Lyrics by : Kannadasan

Female Part

Sarkkarai panthalil

Thaenmazhai pozhiyuthu

Antha saagasa kalaigalin

Avasiyam puriyuthu

Female Part

Sarkkarai panthalil

Thaenmazhai pozhiyuthu

Antha saagasa kalaigalin

Avasiyam puriyuthu avasiyam puriyuthu

Male Part

Ilamaiyin bodhaiyo

Orr iravinil theerumo

Paniyilae nanaiyalaam

Antha nilavilae kaayalaam

Male Part

Ilamaiyin bodhaiyo

Orr iravinil theerumo

Paniyilae nanaiyalaam

Antha nilavilae kaayalaam

Nilavilae kaayalaam

Female Part

Jeeva nathiyendru naalum inbam

Sinthu nadhiyaaga vanthaal

Jeeva nathiyendru naalum inbam

Sinthu nadhiyaaga vanthaal

Vellam karai meeri thulli varumpothu

Alli anaikkatti kondaal

Male Part

Idhazh tharum kavinayam

Idai tharum abhinayam

Idam idhu adhisayam

Sugam perum ragasiyam

Female : Thevaiyo periyathu

Kaalamo siriyathu…..

Female Part

Sarkkarai panthalil

Thaenmazhai pozhiyuthu

Antha saagasa kalaigalin

Avasiyam puriyuthu avasiyam puriyuthu

Male Part

Thanga kalasaththil thaenum paalum

Thaangi varugindra paavai

Thanga kalasaththil thaenum paalum

Thaangi varugindra paavai

Thaagam thaniyaamal mogam kuraiyaamal

Thaavi alai modhum paarvai

Female Part

Malar udal ilaiyathu

Thodum karam iniyathu

Dhinam Varum kathai idhu

Thunai varum uravithu

Male : Neenginaal suduvathu

Koodinaal kulirvathu

Male Part

Sarkkarai panthalil

Thaenmazhai pozhiyuthu

Antha saagasa kalaigalin

Avasiyam puriyuthu avasiyam puriyuthu

Female Part

Ilamaiyin bodhaiyo

Orr iravinil theerumo

Paniyilae nanaiyalaam

Antha nilavilae kaayalaam

Antha nilavilae kaayalaam

Male Part

Sarkkarai panthalil

Female : Thaenmazhai pozhiyuthu

Male : Antha saagasa kalaigalin

Both : Avasiyam puriyuthu avasiyam puriyuthu

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சர்க்கரை பந்தலில்

தேன்மழை பொழியுது

அந்த சாகசக் கலைகளின்

அவசியம் புரியுது

பெண் : சர்க்கரை பந்தலில்

தேன்மழை பொழியுது

அந்த சாகசக் கலைகளின்

அவசியம் புரியுது அவசியம் புரியுது

ஆண் : இளமையின் போதையோ

ஓர் இரவினில் தீருமோ

பனியிலே நனையலாம்

அந்த நிலவிலே காயலாம்

ஆண் : இளமையின் போதையோ

ஓர் இரவினில் தீருமோ

பனியிலே நனையலாம்

அந்த நிலவிலே காயலாம்

நிலவிலே காயலாம்

பெண் : ஜீவ நதியென்று நாளும் இன்பம்

சிந்து நதியாக வந்தாள்

ஜீவ நதியென்று நாளும் இன்பம்

சிந்து நதியாக வந்தாள்

வெள்ளம் கறை மீறி துள்ளி வரும்போது

அள்ளி அணைக்கட்டிக் கொண்டாள்

ஆண் : இதழ் தரும் கவிநயம்

இடை தரும் அபிநயம்

இடம் இது அதிசயம்

சுகம் பெறும் ரகசியம்

பெண் : தேவையோ பெரியது

காலமோ சிறியது.......

பெண் : சர்க்கரை பந்தலில்

தேன்மழை பொழியுது

அந்த சாகசக் கலைகளின்

அவசியம் புரியுது அவசியம் புரியுது

ஆண் : தங்க கலசத்தில் தேனும் பாலும்

தாங்கி வருகின்ற பாவை

தங்க கலசத்தில் தேனும் பாலும்

தாங்கி வருகின்ற பாவை

தாகம் தணியாமல் மோகம் குறையாமல்

தாவி அலை மோதும் பார்வை

பெண் : மலர் உடல் இளையது

தொடும் கரம் இனியது

தினம் வரும் கதை இது

துணை வரும் உறவிது

ஆண் : நீங்கினால் சுடுவது

கூடினால் குளிர்வது

ஆண் : சர்க்கரை பந்தலில்

தேன்மழை பொழியுது

அந்த சாகசக் கலைகளின்

அவசியம் புரியுது அவசியம் புரியுது

பெண் : இளமையின் போதையோ

ஓர் இரவினில் தீருமோ

பனியிலே நனையலாம்

அந்த நிலவிலே காயலாம்

அந்த நிலவிலே காயலாம்

ஆண் : சர்க்கரை பந்தலில்

பெண் : தேன்மழை பொழியுது

ஆண் : அந்த சாகசக் கலைகளின்

இருவர் : அவசியம் புரியுது

அவசியம் புரியுது.........

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: P. Srinivasan

Lyrics by: Kannadasan

Release information: From Pattampoochi (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: P. Srinivasan

Explore this song