Roman script

Singers : S. P. Balasubrahmanyam, Ravi Gopinath and Priyanka NK

Music by : Ramgopal Krishnaraju

Male Part

Potraamarai

Pattrum yena

Suttrum punal

Kaanum nodi

Male Part

Kattrai kodi

Settram ura

Kuttram sila

Aattrum nodi

Female Part

Yeriyum thazhal vittu

Siragugal virippaval

Karugum siragodu

Vaanathil parappaval

Male Part

Potraamarai

Pattrum yena

Suttrum punal

Kaanum nodi

Male Part

Kattrai kodi

Settram ura

Kuttram sila

Aattrum nodi

Female Part

Udhirkka mudiyaadha

Vali ival idhayathil

Asaikka mudiyaatha

Uram ival manadhinil

Male Part

Potraamarai

Pattrum yena

Suttrum punal

Kaanum nodi

Male Part

Kattrai kodi

Settram ura

Kuttram sila

Aattrum nodi

Male Part

Raa raraa rara raaa

Ru ruru ……

Female Part

Kaatilae orr poovaa

Yaar ival

Theeyilae orr kaadaa

Yaar ival

Male Part

Kaadhalum seivaalae

Kangalum koivaalae

Kaadhalaa nee imaikaiyilae

Male : Thendralaai selvaalae

Nindru thaan kolvaalae

Paadhagaa nee sirikkayil

Male Part

Mei yaadhenin

Poiyin nizhal

Kaanum varai

Vaazhvae suzhal

Male Part

Yaavum pizhai

Thoolaai thadai

Thaanae padai

Raththam vidai

Male Part

Puthirgal ovvondrum

Avizhndhida avizhndhida

Irugum nenjangal

Negizhndhida negizhndhida

Male Part

Kuttram yenil

Nyaayam ethu

Sattam yenil

Tharmam ethu

Male Part

Verroor ival

Verroor kadhai

Verroor irul

Verroor oli

Male Part

Irunda vaanodu

Oli mazhai pozhinthida

Kurudhi karai yaavum

Irudhiyil azhinthida

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், ரவி கோபிநாத் மற்றும் பிரியங்கா

இசையமைப்பாளர் : ராம்கோபால் கிருஷ்ணராஜு

ஆண் : பொற்றாமரை

பற்றும் என

சுற்றும் புனல்

காணும் நொடி

ஆண் : கற்றை கொடி

செற்றம் உற

குற்றம் சில

ஆற்றும் நொடி

பெண் : எரியும் தழல் விட்டு

சிறகுகள் விரிப்பவள்

கருகும் சிறகோடு

வானத்தில் பறப்பவள்

ஆண் : பொற்றாமரை

பற்றும் என

சுற்றும் புனல்

காணும் நொடி

ஆண் : கற்றை கொடி

செற்றம் உற

குற்றம் சில

ஆற்றும் நொடி

பெண் : உதிர்க்க முடியாத

வலி இவள் இதயத்தில்

அசைக்க முடியாத

உரம் இவள் மனதினில்

ஆண் : பொற்றாமரை

பற்றும் என

சுற்றும் புனல்

காணும் நொடி

ஆண் : கற்றை கொடி

செற்றம் உற

குற்றம் சில

ஆற்றும் நொடி

ஆண் : ரா ராரா ராரா ரா

ரு ருரு......

பெண் : காட்டிலே ஓர் பூவா

யார் இவள்

தீயிலே ஓர் காடா

யார் இவள்

ஆண் : காதலும் செய்வாளே

கண்களும் கொய்வாளே

காதலா நீ இமைக்கையிலே

ஆண் : தென்றலாய் செல்வாளே

நின்றுதான் கொல்வாளே

பாதகா நீ சிரிக்கையிலே

ஆண் : மெய் யாதெனின்

பொய்யின் நிழல்

காணும் வரை

வாழ்வே சுழல்

ஆண் : யாவும் பிழை

தூளாய் தடை

தானே படை

இரத்தம் விடை

ஆண் : புதிர்கள் ஒவ்வொன்றும்

அவிழ்ந்திட அவிழ்ந்திட

இறுகும் நெஞ்சங்கள்

நெகிழ்ந்திட நெகிழ்ந்திட

ஆண் : குற்றம் எனில்

நியாயம் எது

சட்டம் எனில்

தர்மம் எது

ஆண் : வேறோர் இவள்

வேறோர் கதை

வேறோர் இருள்

வேறோர் ஒளி

ஆண் : இருண்ட வானோடு

ஒளி மழை பொழிந்திட

குருதி கறை யாவும்

இறுதியில் அழிந்திட

Song information

Singers: S. P. Balasubrahmanyam, Ravi Gopinath and Priyanka NK

Music by: Ramgopal Krishnaraju

Release information: From Vellai Pookkal (2019) · Lyricist: Madhan Karky

Explore this song