Roman script

Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela and Chorus

Music by : Ilayaraja

Male Part

Poongodiyae kai veesu…

Pudhu malarae vaai paesu…

Male Part

Poongodiyae kai veesu….

Pudhu malarae vaai paesu….

Oru kili thazhuvuthu tholodu

Siru kili uruluthu maarbodu

Kudumbamae azhagiya kilikkoodu

Chorus

Kaattradiththu intha koodu kalaiyaathu

Vennilavu thannipattu anaiyathu

Male : Haan

Male and Female :

Poongodiyae kai veesu…

Pudhu malarae vaai paesu….

Female Part

…………………

Female Part

Ennai unnai ellaam ingae pirinthu

Ammaa appaa engae ponaar paranthu

Ennai unnai ellaam ingae pirinthu

Ammaa appaa engae ponaar paranthu

Male Part

Chinnanchiru pillaigalai maranthu

Enna idhu kaattukkullae virunthu

Female Part

Appaavukku kannaththilae sivappu

Male : Ammaavukku nenjukkullae sirippu

Chorus : Appavukkum amma polae muththam podu

Thaenedukkum vandu polae saththam podu

Male : Aahaan

Female Part

Poongodiyae kai veesu…

Male : Aahaan

Female : Pudhu malarae vaai paesu….

Male : Mmheemhmm

Male Part

Vennilavu nammai kandu mayangum

Antha natchaththiram mannil vanthu irangum

Vennilavu nammai kandu mayangum

Antha natchaththiram mannil vanthu irangum

Female Part

Chinna chinna siragugal mulaikkum

Mannai vittu vinnilengum parakkum

Male Part

Maegaththodu pottiyittu adangum

Meendum intha koottil vanthu urangum

Chorus

Kaattradiththu intha koodu kalaiyaathu

Male : Hmm

Chorus : Vennilavu thannipattu anaiyathu

Male : Aha haa

Male Part

Poongodiyae kai veesu…

Male and Female :

Pudhu malarae vaai paesu….

Male Part

Oru kili thzhuvuthu tholodu

Female : Siru kili uruluthu maarbodu

Male and Female :

Kudumbamae azhagiya kilikkoodu

Chorus

Kaattradiththu intha koodu kalaiyaathu

Male : Hhhoom

Chorus : Vennilavu thannipattu anaiyathu

Male : Haa haa

Male and Female :

Poongodiyae kai veesu…

Pudhu malarae vaai paesu….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்கொடியே கை வீசு

புது மலரே வாய் பேசு

ஆண் : பூங்கொடியே கை வீசு

புது மலரே வாய் பேசு

ஒரு கிளி தழுவுது தோளோடு

சிறு கிளி உருளுது மார்போடு

குடும்பமே அழகிய கிளிக்கூடு

குழு : காற்றடித்து இந்த கூடு கலையாது

வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது

ஆண் : ஹான்

ஆண் மற்றும் பெண் :

பூங்கொடியே கை வீசு.....

புது மலரே வாய் பேசு.....

பெண் : ம்ம்மம்ஹூம்ம்ம்மம்ஹூம்.....

ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்ஹீம்ஹ்ம்ம்

ம்ம்மம்ஹூம்ம்ம்மம்ஹூம்.....

ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்ஹீம்ஹ்ம்ம்

பெண் : என்னை உன்னை எல்லாம் இங்கே பிரிந்து

அம்மா அப்பா எங்கே போனார் பறந்து

என்னை உன்னை எல்லாம் இங்கே பிரிந்து

அம்மா அப்பா எங்கே போனார் பறந்து

ஆண் : சின்னஞ்சிறு பிள்ளைகளை மறந்து

என்ன இது காட்டுக்குள்ளே விருந்து

பெண் : அப்பாவுக்கு கன்னத்திலே சிவப்பு

ஆண் : அம்மாவுக்கு நெஞ்சுக்குள்ளே சிரிப்பு

குழு : அப்பாவுக்கும் அம்மா போலே முத்தம் போடு

தேனெடுக்கும் வண்டு போலே சத்தம் போடு

ஆண் : ஆஹான்

பெண் : பூங்கொடியே கை வீசு

ஆண் : ஆஹான்

பெண் : புது மலரே வாய் பேசு

ஆண் : ம்ம்ஹீம்ஹ்ம்ம்

ஆண் : வெண்ணிலவு நம்மை கண்டு மயங்கும்

அந்த நட்சத்திரம் மண்ணில் வந்து இறங்கும்

வெண்ணிலவு நம்மை கண்டு மயங்கும்

அந்த நட்சத்திரம் மண்ணில் வந்து இறங்கும்

பெண் : சின்ன சின்ன சிறகுகள் முளைக்கும்

மண்ணை விட்டு விண்ணிலெங்கும் பறக்கும்

ஆண் : மேகத்தோடு போட்டியிட்டு அடங்கும்

மீண்டும் இந்த கூட்டில் வந்து உறங்கும்

குழு : காற்றடித்து இந்த கூடு கலையாது

ஆண் : ஹ்ம்ம்

குழு : வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது......

ஆண் : ஆஹ ஹா

ஆண் : பூங்கொடியே கை வீசு....

ஆண் மற்றும் பெண் :

புது மலரே வாய் பேசு.....

ஆண் : ஒரு கிளி தழுவுது தோளோடு

பெண் : சிறு கிளி உருளுது மார்போடு

ஆண் மற்றும் பெண் :

குடும்பமே அழகிய கிளிக்கூடு

குழு : காற்றடித்து இந்த கூடு கலையாது

ஆண் : ஹ்ஹும்

குழு : வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது

ஆண் : ஹாஹா

ஆண் மற்றும் பெண் :

பூங்கொடியே கை வீசு.....

புது மலரே வாய் பேசு.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela and Chorus

Music by: Ilayaraja

Release information: From Oonjalaadum Uravugal (1985) · Lyricist: Vairamuthu

Explore this song