Roman script

Singer : Swetha Menon

Music by : Srinivas

Female Part

Paenjaakkaa mazha thuliyo mannodu

Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu

Saanjaakkaa saaivadhu un tholodu

Moochu onjaakkaa oivadhu un maarbodu

Male Part

Yen yaethathukkum yerakkathukkum

Enna kora

Naan saethukkulla poothu vandha

Senthaamara

Onna oruthalaiyaa kaadhalichaa

Tharuthalaiyaa sollu dhora

Female Part

Paenjaakkaa mazha thuliyo mannodu

Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu

Female Part

Sothu pathu venuminnu

Unna kettaalaa

Pathu kaasu nethip pottu

Podhum kannaalaa

Kaathu mazha kulirukkoru

Kambali kettaalaa

Kattikittu anaikkum veppam

Podhum kannaalaa

Female Part

Kaal valantha aambalaya

Aaa…aaa…haa…aaa…..

Kaal valantha aambalaya

Kanneduthu paaru

En kannukkula neeru

Naa katti vecha karpu ellam

Kottithaaran koodayila

Female Part

Paenjaakkaa mazha thuliyo mannodu

Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu

Saanjaakkaa saaivadhu un tholodu

Moochu onjaakkaa oivadhu un maarbodu

Female Part

Moonu mudi kairu potta

Naan on pondaati

Moonu mozha kaiyurum venum

Neeyum illaati

Female Part

Kattikittu kaadhal panna

Ennam varaati

Thitti rendu vaartha sollu

Enna paaraati

Female Part

Athuvana kaatukkulla

Aaa…aaa…haa…aaa…..

Athuvana kaatukkula

Othayila irukken

Naan unna nambi irukken

Un echi sora pitcha kettu

Raa pagala naan kedakken

Female Part

Paenjaakkaa mazha thuliyo mannodu

Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu

Saanjaakkaa saaivadhu un tholodu

Moochu onjaakkaa oivadhu un maarbodu

Male Part

Yen yaethathukkum yerakkathukkum

Enna kora

Naan saethukkulla poothu vandha

Senthaamara

Onna oruthalaiyaa kaadhalichaa

Tharuthalaiyaa sollu dhora

தமிழ்

பாடகி : ஸ்வேதா மேனன்

இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ்

பெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு

நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு

சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு

மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு

ஆண் : என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும்

என்ன கொறை

நான் சேத்துக்குள்ள பூத்து வந்த

செந்தாமரை

உன்ன ஒரு தலையா காதலிச்சா

தறுதலையா சொல்லு தொரை

பெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு

நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு

பெண் : சொத்து பத்து வேணுமுன்னு

உன்ன கேட்டாளா

பத்து காசு நெத்தி போட்டு

போதும் கண்ணாளா

காத்து மழை குளுருக்கொரு

கம்பளி கேட்டாளா

கட்டிக்கிட்டு அணைக்கும் வெப்பம்

போதும் கண்ணாளா

பெண் : கால் வளர்ந்த ஆம்பிளைய

ஆஅ....ஆஅ.....ஹா....ஆ....

கால் வளர்ந்த ஆம்பிளைய

கண்ணெடுத்து பாரு

என் கண்ணுக்குள்ள நீரு

நான் கட்டிவச்ச கற்பு எல்லாம்

கொட்டி தரேன் கூடையில

பெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு

நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு

சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு

மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு

பெண் : மூணு முடி கயிறு போட்டா

நான் உன் பொண்டாட்டி

மூணு முழம் கயிறு வேணும்

நீயும் இல்லாட்டி

பெண் : கட்டிக்கிட்டு காதல் பண்ண

எண்ணம் வராட்டி

திட்டி ரெண்டு வார்த்தை சொல்லு

என்ன பாராட்டி

பெண் : அத்து வன காட்டுக்குள்ள....

ஆஅ.....ஆஅ....ஹா....ஆ.......

அத்து வன காட்டுக்குள்ள

ஒத்தையில இருக்கேன்

நான் உன்ன நம்பி இருக்கேன்

உன் எச்சி சோத்த பிச்ச கேட்டு

ராப்பகலா நான் கிடக்கேன்

பெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு

நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு

சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு

மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு

ஆண் : என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும்

என்ன கொறை

நான் சேத்துக்குள்ள பூத்து வந்த

செந்தாமரை

உன்ன ஒரு தலையா காதலிச்சா

தறுதலையா சொல்லு தொரை

Song information

Singer: Swetha Menon

Music by: Srinivas

Release information: From Kangaroo (2015) · Lyricist: Vairamuthu

Explore this song