Roman script

Singers : Srinivas, Sujatha and Sunitha Sarathy

Music by : Srinivas

Male Part

Ini naanum naan illai

Iyalbaaga yen illai

Solladi solladi..

Munpola naan illai

Mugam kooda yenathillai

Yenadi…yenadi…

Male Part

Naanum neeyum

Yeno innum

Veru veraaii

Dhooram endra sollai

Thookkil pottu kolla

Nee vaaraaii..

Puraiyerumbodhellaam

Thaniyaaga sirikkindren

Adhu yenadi…

Female Part

Ini naanum naan illai

Iyalbaaga yen illai

Solladaa solladaa

Munpola naan illai

Mugam kooda yenathillai

Yenadaa… yenadaa..

Male Part

Onnathu kannathin

Kuliyinil katti pottenaa

Paduthukolla virumbiyathum

Sirithaai..

Naan vilunthen

Female Part

Kaiyil kedigaaram

Irunthabodhum yennai

Mani kettathil.. ada

Naan vilunthen

Male Part

Oru vaarthai pesaamal

Puruvathai nee thookki

Oru paarvai paarthaayae

Adhilthanae naan vilunthen

Female Part

Yen piranthanaal vaalthai

Sollavae neeyum

Nalliravil parisodu

Suvareri kuthithaayae

Appodhu naan vilunthen

Male Part

Eppodhu ninaithaalum

Ippodhu pol thondrum

Anbae…

Male Part

Ini naanum naan illai

Iyalbaaga yen illai

Solladi solladi..

Female Part

Engum pogaamal

Manithargal mugathai paaraamal

Varudam muluthum

Vidumurai ena enni kolvoamaa..

Male Part

Podhum podhaadha

Aadai nee aniya..

Paarthum paaraathavan

Pol rasippenae

Female Part

Pasithaalum onnaamal

Tholaipesi mani osai

Alaithaalum nagaraamal

Somberi pol aavom

Male Part

Pasithaalum onnaamal

Tholaipesi mani osai

Alaithaalum nagaraamal

Somberi pol aavom

Sila naatkal vaalvomaa….

Female Part

Dhinamthorum sila oodal

Thithikkum oru thedal

Nigalum…

Female Part

Ini naanum naan illai

Iyalbaaga yen illai

Solladaa solladaa

Munpola naan illai

Mugam kooda yenathillai

Yenadaa… yenadaa..

Male Part

Naanum neeyum

Yeno innum

Veru veraaii

Dhooram endra sollai

Thookkil pottu kolla

Nee vaaraaii..

Puraiyerumbodhellaam

Thaniyaaga sirikkindren

Female : Adhu yennn..

தமிழ்

பாடகிகள் : சுஜாதா, சுனிதா சாரதி

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ்

ஆண் : இனி நானும்

நான் இல்லை இயல்பாக

ஏன் இல்லை சொல்லடி

சொல்லடி

முன்போல நான்

இல்லை முகம் கூட

எனதில்லை ஏனடி

ஏனடி

ஆண் : நானும் நீயும்

ஏனோ இன்னும் வேறு

வேறாய் தூரம் என்ற

சொல்லை தூக்கில்

போட்டு கொள்ள நீ

வாராய் புரையேறும்

போதெல்லாம் தனியாக

சிரிக்கின்றேன் அது ஏனடி

பெண் : இனி நானும்

நான் இல்லை இயல்பாக

ஏன் இல்லை சொல்லடா

சொல்லடா முன்போல நான்

இல்லை முகம் கூட

எனதில்லை ஏனடா

ஏனடா

ஆண் : உன்னது

கன்னத்தின் குழியினில்

கட்டி போட்டேனா படுத்து

கொள்ள விரும்பியதும்

சிரித்தாய் நான் விழுந்தேன்

பெண் : கையில்

கடிகாரம் இருந்த

போதும் என்னை

மணி கேட்டதில்

அட நான் விழுந்தேன்

ஆண் : ஒரு வார்த்தை

பேசாமல் புருவத்தை

நீ தூக்கி ஒரு பார்வை

பார்த்தாயே அதில் தானே

நான் விழுந்தேன்

பெண் : என் பிறந்தநாள்

வாழ்த்தை சொல்லவே

நீயும் நல் இரவில் பரிசோடு

சுவரேறி குதித்தாயே

அப்போது நான் விழுந்தேன்

ஆண் : எப்போது

நினைத்தாலும்

இப்போது போல்

தோன்றும் அன்பே

ஆண் : இனி நானும்

நான் இல்லை இயல்பாக

ஏன் இல்லை சொல்லடி

சொல்லடி

பெண் : எங்கும்

போகாமல் மனிதர்கள்

முகத்தை பாராமல்

வருடம் முழுதும்

விடுமுறை என

எண்ணி கொள்வோமா

ஆண் : போதும் போதாத

ஆடை நீ அணிய பார்த்தும்

பாராதவன் போல் ரசிப்பேனே

பெண் : பசித்தாலும்

உண்ணாமல் தொலைபேசி

மணி ஓசை அழைத்தாலும்

நகராமல் சோம்பேறி போல்

ஆவோம்

ஆண் : பசித்தாலும்

உண்ணாமல் தொலைபேசி

மணி ஓசை அழைத்தாலும்

நகராமல் சோம்பேறி போல்

ஆவோம் சில நாட்கள்

வாழ்வோமா

பெண் : தினம்தோறும்

சில ஊடல் தித்திக்கும்

ஒரு தேடல் நிகழும்

பெண் : இனி நானும்

நான் இல்லை இயல்பாக

ஏன் இல்லை சொல்லடா

சொல்லடா முன்போல நான்

இல்லை முகம் கூட

எனதில்லை ஏனடா

ஏனடா

ஆண் : நானும் நீயும்

ஏனோ இன்னும் வேறு

வேறாய் தூரம் என்ற

சொல்லை தூக்கில்

போட்டு கொள்ள நீ

வாராய் புரையேறும்

போதெல்லாம் தனியாக

சிரிக்கின்றேன்

பெண் : அது ஏன்

Song information

Singers: Srinivas, Sujatha and Sunitha Sarathy

Music by: Srinivas

Release information: From Yai Nee Romba Azgha Irruke (2002) · Lyricist: Vaali

Explore this song