Roman script
Singers : T. M. Soundararajan, P. Susheela and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Paasa malarae anbil vilaintha vaasa malarae Manam mudikkum naal vanthatho Paasa malarae anbil vilaintha vaasa malarae Manam mudikkum naal vanthatho Male Part Un madiyinil thavazhnthidum veenai Ini mayangidum thunaivarum naalai Un mounam….isaikkum…..geedhamae Male Part Paasa malarae anbil vilaintha vaasa malarae Manam mudikkum naal vanthatho Female Part Muththu manicharam modhiram nagaigal poottavae Mullai malar charam malligai kuzhalil soottavae Vanna karangalil thaayival valaiyal maattuvaen Chinna vizhigalin oram engum maiyai theettavae Mael : Kanmaniyae engal ponmaniyae Nalla karpagamae penmai arputhamae Nee medai vanthu maalai kollum Vaibogamae….dheiveegamae Female Part Paasa malarae anbil vilaintha vaasa malarae Male : Manam mudikkum naal vanthatho Male Part Nettri thilagamum thaaliyum nilaiththu vaazhgavae Female : Vettri thirumagal vaasalai nalangal soozhgavae Male : Anbai uraiththida vaayillaatha azhagu silaiyival Female : Konda pasiyaiyum kooridaatha kuzhanthai pondraval Male Part Un vasaththil intha oomai kuyil Ival inbam thunbam ini unthan kaiyil Nee kaaval nidru kaaththiduga kann polavae pon polavae Male Part Paasa malarae anbil vilaintha vaasa malarae Kulamagal nee vaazhgavae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுஷீலா மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே மணம் முடிக்கும் நாள் வந்ததோ பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே மணம் முடிக்கும் நாள் வந்ததோ ஆண் : உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை இனி மயக்கிடும் துணைவரும் நாளை உன் மௌனம்..........இசைக்கும்.........கீதமே ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே மணம் முடிக்கும் நாள் வந்ததோ பெண் : முத்து மணிச்சரம் மோதிரம் நகைகள் பூட்டவே முல்லை மலர் சரம் மல்லிகை குழலில் சூட்டுவே வண்ணக் கரங்களில் தாயிவள் வளையல் மாட்டுவேன் சின்ன விழிகளின் ஓரம் எங்கும் மையை தீட்டவே ஆண் : கண்மணியே எங்கள் பொன்மணியே நல்ல கற்பகமே பெண்மை அற்புதமே நீ மேடை வந்து மாலைக் கொள்ளும் வைபோகமே......தெய்வீகமே பெண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே ஆண் : மணம் முடிக்கும் நாள் வந்ததோ ஆண் : நெற்றி திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே பெண் : வெற்றித் திருமகள் வாசலை நலங்கள் சூழ்கவே ஆண் : அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலையிவள் பெண் : கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள் ஆண் : உன் வசத்தில் இந்த ஊமைக் குயில் இவள் இன்பம் துன்பம் இனி உந்தன் கையில் நீ காவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே குலமகளே நீ வாழ்கவே
Song information
Singers: T. M. Soundararajan, P. Susheela and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Neethibathi (1983) · Singer: T. M. Soundararajan, P. Susheela and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Singer: P. Susheela and S. P. Sailaja
- Film / album: Neethibathi
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali