Roman script

Singer : Vani Jayaram

Music by : S. R. Vasu

Female Part

Aaraaro aariraro nee yaaro thaai yaaro

Idhil unmaiyai yaar arivaaro

Female Part

Paalootta thaayillaiyaa

Un thaai pola naan illaiyaa

Paalootta thaayillaiyaa

Un thaai pola naan illaiyaa

Female Part

Nenjil idam maari vilaiyaadum thendralae

Thaei pirai yaedhum ariyaatha thingalae

Female Part

Anbu paalootta thaayillaiyaa

Un thaai pola naan illaiyaa

Female Part

Eerainthu maadhanal thaangi madi thaangi

Idai noga mel mochchu vaangi dhinam vaanggi

Oru thaaikku magalaaga vanthaai

Inga maru thaaikku magalaagi nindraai

Ingu maru thaaikku magalaagi nindraai

Female Part

Unakku paalootta thaayillaiyaa

Un thaai pola naan illaiyaa

Female Part

Oru naaikkum thaaiyaagum ullam anbu vellam

Karunaikku porul enna sollum ival illam

Thaaimaikku kidaiyaathu bedham

Endrum adhuthaanae tharamaana vedham

Endrum adhuthaanae tharamaana vedham

Female Part

Unakku paalootta thaayillaiyaa

Un thaai pola naan illaiyaa

Female Part

Oru peru nee petra peru arum peru

Un thaai thanthai ivarendru kooru veru yaaru

Eduththaalum valarththaalum thaaithaan

Nee endrendrum ivalanbu saeithaan

Nee endrendrum ivalanbu saeithaan

Female Part

Unakku paalootta thaayillaiyaa

Un thaai pola naan illaiyaa

Female Part

Nenjil idam maari vilaiyaadum thendralae

Thaeipirai yaedhum ariyaatha thingalae

Female Part

Anbu paalootta thaayillaiyaa

Un thaai pola naan illaiyaa…..

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எஸ். ஆர். வாசு

பெண் : ஆராரோ ஆரிரரோ நீ யாரோ தாய் யாரோ

இதில் உண்மையை யார் அறிவாரோ

பெண் : பாலூட்ட தாயில்லையா

உன் தாய்ப் போல நானில்லையா

பாலூட்ட தாயில்லையா

உன் தாய்ப் போல நானில்லையா

பெண் : நெஞ்சில் இடம் மாறி விளையாடும் தென்றலே

தேய்ப்பிறை ஏதும் அறியாத திங்களே

பெண் : அன்பு பாலூட்ட தாயில்லையா

உன் தாய்ப் போல நானில்லையா

பெண் : ஈரைந்து மாதங்கள் தாங்கி மடி தாங்கி

இடை நோக மேல் மூச்சு வாங்கி தினம் வாங்கி

ஒரு தாய்க்கு மகளாக வந்தாய்

இங்கு மறு தாய்க்கு மகளாகி நின்றாய்

இங்கு மறு தாய்க்கு மகளாகி நின்றாய்

பெண் : உனக்கு பாலூட்ட தாயில்லையா

உன் தாய்ப் போல நானில்லையா

பெண் : ஒரு நாய்க்கும் தாயாகும் உள்ளம் அன்பு வெள்ளம்

கருணைக்கு பொருள் என்ன சொல்லும் இவள் இல்லம்

தாய்மைக்கு கிடையாது பேதம்

என்றும் அதுதானே தரமான வேதம்

என்றும் அதுதானே தரமான வேதம்

பெண் : உனக்கு பாலூட்ட தாயில்லையா

உன் தாய்ப் போல நானில்லையா...

பெண் : ஒரு பேரு நீ பெற்ற பேரு அரும் பேரு

உன் தாய் தந்தை இவரென்று கூறு வேறு யாரு

எடுத்தாலும் வளர்த்தாலும் தாய்தான்

நீ என்றென்றும் இவளன்பு சேய்தான்

நீ என்றென்றும் இவளன்பு சேய்தான்

பெண் : உனக்கு பாலூட்ட தாயில்லையா

உன் தாய்ப் போல நானில்லையா

பெண் : நெஞ்சில் இடம் மாறி விளையாடும் தென்றலே

தேய்ப்பிறை ஏதும் அறியாத திங்களே

பெண் : உனக்கு பாலூட்ட தாயில்லையா

உன் தாய்ப் போல நானில்லையா....

Song information

Singer: Vani Jayaram

Music by: S. R. Vasu

Release information: From Athaimadi Methaiyadi (1989) · Lyricist: Pulamaipithan

Explore this song