Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Adiyaei oru pechchukku sonnaen idhu Pen buththithaanae Oru naayagan munnae naam naayagithaanae Oru pechchukku sonnaen idhu Pen buththithaanae Oru naayagan munnae naam naayagithaanae Female Part Thangai enbathil sontha urimai undadi Thangai enbathil sontha urimai undadi Idhil thalaivi ennum payaril Enna perumai undadi Idhail thalaivi ennum peyaril Enna perumai undadi Female Part Adiyaei oru pechchukku sonnaen idhu Pen buththithaanae Oru aadavan vanthaal naam adimaigalthaanae Female Part Thaayaarum unnai pol thaniyaaga vaazhnthaal Nee yaethu un annan uravaethadi Maaraathu uravendru annaavai paadi Vaazhnthaalae kalyaana ninaivedhadi Female Part Pentaatti aanaalthaan kondaattamae Pala penn vaazhvil kalyaanam thindaattamae Adiyaei oru pechchukku sonnaen idhu Pen buththithaanae Oru aadavan vanthaal naam adimaigalthaanae Female Part Inbangal saripaathi thunbangal paathi Kondaadum ilvaazhvu kulavaazhvadi Inbangal saripaathi thunbangal paathi Kondaadum ilvaazhvu kulavaazhvadi Female Part Thallaadum kaalaththil arivaayadi Adhil thaai veetu thunai pola thunai yaedhadi Female Part Adiyaei oru pechchukku sonnaen idhu Pen buththithaanae Oru naayagan munnae naam naayagithaanae Female Part Aadhaaram neeyendru aththaanin maarbil Neeraadum nilai pola nilai yaedhadi Neeraada naam sendru poraada nernthaal Vearodum kanneeril mudivedhadi Female Part Kanneerum pen sollum kadhaithaanadi Adhu ennaalum en vaazhvil kidaiyaathadi Adhu ennaalum en vaazhvil kidaiyaathadi
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது பெண் புத்திதானே ஒரு நாயகன் முன்னே நாம் நாயகிதானே ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது பெண் புத்திதானே ஒரு நாயகன் முன்னே நாம் நாயகிதானே பெண் : தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி இதில் தலைவி என்னும் பெயரில் என்ன பெருமை உண்டடி இதில் தலைவி என்னும் பெயரில் என்ன பெருமை உண்டடி பெண் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது பெண் புத்திதானே ஒரு ஆடவன் வந்தால் நாம் அடிமைகள்தானே பெண் : தாயாரும் உன்னைப் போல் தனியாக வாழ்ந்தால் நீ ஏது உன் அண்ணன் உறவேதடி மாறாது உறவென்று அண்ணாவைப் பாடி வாழ்ந்தாலே கல்யாண நினைவேதடி பெண் : பெண்டாட்டி ஆனால்தான் கொண்டாட்டமே பல பெண் வாழ்வில் கல்யாணம் திண்டாட்டமே அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது பெண் புத்திதானே ஒரு ஆடவன் வந்தால் நாம் அடிமைகள்தானே பெண் : இன்பங்கள் சரிபாதி துன்பங்கள் பாதி கொண்டாடும் இல்வாழ்வு குலவாழ்வடி இன்பங்கள் துன்பங்கள் எங்கென்று தேடி அங்கெல்லாம் நான் போக முடியாதடி பெண் : தள்ளாடும் காலத்தில் அறிவாயடி அதில் தாய் வீட்டு துணை போல துணை ஏதடி பெண் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது பெண் புத்திதானே ஒரு நாயகன் முன்னே நாம் நாயகிதானே பெண் : ஆதாரம் நீயென்று அத்தானின் மார்பில் நீராடும் நிலை போல நிலை ஏதடி நீராட நாம் சென்று போராட நேர்ந்தால் வேரோடும் கண்ணீரில் முடிவேதடி பெண் : கண்ணீரும் பெண் சொல்லும் கதைதானடி அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Anbukkor Annan (1971) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Anbukkor Annan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan