Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus Om om om om om…. Male Part Omena olippathu ongaara naatham Omena olippathu ongaara naatham Adhai aamena uraippathu naal vagai vedham Thaamena ninaikkum tharukkarai adakkum Thaamena ninaikkum tharukkarai adakkum Omena thudhikkum devi un paatham Chorus Om om om…. Male Part Omena olippathu ongaara naatham Male Part Panneer abishegam seitha perukku Vaazhvin kanneerai maattri vaikkum karumaari Female : Nalla paalaal abhishegam seitha perukku Inbam paalaattam ponga vaikkum karumaari Male Part Thiruneeraal abhishegam seitha perukku Thunbam neeraaga poga vaikkum karumaari Female : Konda kungumaththaal abhishegam seitha perukku Nettri kungumaththai nilaikka vaikkum karumaari Male Part Nalla santhanaththaal Abhishegam seitha perukku Nenjam santhanam pol manakka vaikkum karumaari Female Part Thooya manjal neeril abhishegam seitha perukku Thaali manjalukku kaaval nirkkum karumaari
Thooya manjal neeril abhishegam seitha perukku Thaali manjalukku kaaval nirkkum karumaari Male Part Endrum bakthikkum endrum bakthikku Bakthiyodu abhishegam seitha perukku Both : Dheiva sakthi vanthu sera vaikkum karumari Female Part Naakkaadu pala poigal namai vittu poga Nokkaadu theernthu ullam nalamenbathaaga Naakkaadu pala poigal namai vittu poga Nokkaadu theernthu ullam nalamenbathaaga Male Part Theekkaadu pol pattrum theemaigal azhiya Theekkaadu pol pattrum theemaigal azhiya Vekkaadu pol vaattum vinai muttrum ozhiya Male Part Saakkaadu pol soozhum saabangal tholaiya Saakkaadu pol soozhum saabangal tholaiya Pookkaadu pol inbam pozhuthodu vilaiya Female Part Verkkaadu thanai meavi vaazhgindra devi Verkkaadu thanai meavi vaazhgindra devi Venthaamarai paatham vandaaga moippom Both : Venthaamarai paatham vandaaga moippom Chorus Omsakthi omsakthi omsakthi om Omsakthi omsakthi omsakthi om Omsakthi omsakthi omsakthi om…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்...... ஆண் : ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம் ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம் அதை ஆமென உரைப்பது நால் வகை வேதம் தாமென நினைக்கும் தருக்கரை அடக்கும் தாமென நினைக்கும் தருக்கரை அடக்கும் ஓமென துதிக்கும் தேவி உன் பாதம் குழு : ஓம் ஓம் ஓம்....... ஆண் : ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம் ஆண் : பன்னீர் அபிஷேகம் செய்த பேருக்கு வாழ்வின் கண்ணீரை மாற்றி வைக்கும் கருமாரி பெண் : நல்ல பாலால் அபிஷேகம் செய்த பேருக்கு இன்பம் பாலாட்டம் பொங்க வைக்கும் கருமாரி ஆண் : திருநீரால் அபிஷேகம் செய்த பேருக்கு துன்பம் நீராக போக வைக்கும் கருமாரி பெண் : கொண்ட குங்குமத்தால் அபிஷேகம் செய்த பேருக்கு நெற்றி குங்குமத்தை நிலைக்க வைக்கும் கருமாரி ஆண் : நல்ல சந்தனத்தால் அபிஷேகம் செய்த பேருக்கு நெஞ்சம் சந்தனம் போல் மணக்க வைக்கும் கருமாரி பெண் : தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு தாலி மஞ்சளுக்கு காவல் நிற்கும் கருமாரி தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு தாலி மஞ்சளுக்கு காவல் நிற்கும் கருமாரி ஆண் : என்றும் பக்திக்கு என்றும் பக்திக்கு பக்தியோடு அபிஷேகம் செய்த பேருக்கு இருவர் : தெய்வ சக்தி வந்து சேர வைக்கும் கருமாரி பெண் : நாக்காடு பல பொய்கள் நமை விட்டு போக நோக்காடு தீர்ந்து உள்ளம் நலமென்பதாக நாக்காடு பல பொய்கள் நமை விட்டு போக நோக்காடு தீர்ந்து உள்ளம் நலமென்பதாக ஆண் : தீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய தீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய வேக்காடு போல் வாட்டும் வினை முற்றும் ஒழிய ஆண் : சாக்காடு போல் சூழும் சாபங்கள் தொலைய சாக்காடு போல் சூழும் சாபங்கள் தொலைய பூக்காடு போல் இன்பம் பொழுதோடு விளைய பெண் : வேற்காடு தனை மேவி வாழ்கின்ற தேவி வேற்காடு தனை மேவி வாழ்கின்ற தேவி வெண்தாமரை பாதம் வண்டாக மொய்ப்போம்.... இருவர் : வெண்தாமரை பாதம் வண்டாக மொய்ப்போம்....ஓம்.. குழு : ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்...... ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Devi Sri Karumari Amman (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Devi Sri Karumari Amman
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali