Roman script
Singers : Murugavel and Karthika Vaidyanathan
Music by : Sean Roldan
Female Part
Ahhhaaaa ahhhaaaa
Ahhhaaaa ahhhaaaa….
Male Part
Ola ola kudisayila
Onda vandha seemaatti
Onna naa vachikkuven
Usurukkulla thalatti
Female Part
Aarae kaanja podhum
Anbula nee neeradu
Sorae illanalum
Sondha irukkum unnodu
Female Part
{Vaa seekkiram poovodadhan
Male : Naa ippave un kudadhan aahh..} (2)
Male Part
Vaasalila kolamida
Aasapada venamae
Vaasalae illa veettil
Poosani poo needhanae
Female Part
Vairathula thodu senju
Pottu kolla venamae
Vairama neeyum sera
Nagaiyum nattum poi dhanae
Male Part
Vervaiyila nool eduththu
Sela nenju na tharuven
Vekka pattu nee siricha
Kattikuven
Male Part
Koodi kalanja peragum
En pasam oorudhae
Female : Yeru veyila pola
Sandhosam koodudhae
Male Part
Ola ola kudisayila
Onna naa vachukkuven
Male Part
Maasam sila ponadhumae
Maanickama retta pulla
Onnaa nee peththu thandha
Maruthu vachi billu micham
Female Part
Peththedutha pillaigala
Rathinam pol aakkanumae
English-um padikkavachu
Aeroplane-il yethanumae
Male Part
Thonaiya senthirundha
Nalliravu vellivarum
Thummalidum sathathukkae
Sami varum
Male Part
Vaala venun naama
Mazha kaathu bhoomiyaa
Female : Aasa theera vaazhndha
Maru senmam thevaiyaa
Male Part
Ola ola kudisayila
Onda vandha seemaatti
Onna naa vachikkuven
Usurukkulla thalatti
Female Part
Aarae kaanja podhum
Anbula nee neeradu
Sorae illanalum
Sondha irukkum unnodu
Female Part
{Vaa seekkiram poovodadhan
Male : Naa ippave un kudadhan aahh..} (2)தமிழ்
பாடகி : கார்த்திகா வைத்திய நாதன்
பாடகர் : முருகவேல்
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
ஆண் : ஓலை ஓலை
குடிசையில ஒண்ட
வந்த சீமாட்டி உன்ன
நான் வச்சிக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி
பெண் : ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு சோறே
இல்லனாலும் சொந்தம்
இருக்கும் உன்னோடு
பெண் : { வா சீக்கிரம்
பூவோடத்தான்
ஆண் : நா இப்பவே
உன் கூட தான் ஆஆ } (2)
ஆண் : வாசலில கோலமிட
ஆசப்பட வேணாமே வாசலே
இல்லா வீட்டில் பூசணிப் பூ
நீதானே
பெண் : வைரத்துல தோடு
செஞ்சு போட்டுக்கொள்ள
வேணாமே வைரமா நீயும்
சேர நகையும் நட்டும்
பொய்தானே
ஆண் : வேர்வையில
நூலெடுத்து சேலை
நெஞ்சு நா தருவேன்
வெக்கப்பட்டு நீ சிரிச்சா
கட்டிக்குவேன்
ஆண் : கூடி கலைஞ்ச பிறகும்
என் பாசம் ஊறுதே
பெண் : ஏறு வெயிலப் போல
சந்தோஷம் கூடுதே
ஆண் : ஓலை ஓலை
குடிசையில உன்ன
நா வச்சிக்குவேன்
ஆண் : மாசம் சில போனதுமே
மாணிக்கமா ரெட்ட புள்ள
ஒன்னா நீ பெத்துத் தந்தா
மருத்துவச்சி பில்லு மிச்சம்
பெண் : பெத்தெடுத்த பிள்ளைகள
ரத்தினம் போல் ஆக்கனுமே
இங்கிலீசும் படிக்க வச்சு
ஏரோப் பிளேனில் ஏத்தனுமே
ஆண் : துணையா சேந்திருந்தா
நள்ளிரவு வெள்ளிவரும்
தும்மலிடும் சத்தத்துக்கே
சாமிவரும்
ஆண் : வாழ வேணும் நாம
மழைக்காத்து பூமியா
பெண் : ஆசை தீர வாழ்ந்தா
மறு சென்மம் தேவையா
ஆண் : ஓலை ஓலை
குடிசையில ஒண்ட
வந்த சீமாட்டி உன்ன
நான் வச்சிக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி
பெண் : ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு சோறே
இல்லனாலும் சொந்தம்
இருக்கும் உன்னோடு
பெண் : { வா சீக்கிரம்
பூவோடத்தான்
ஆண் : நா இப்பவே
உன் கூட தான் ஆஆ } (2)Song information
Singers: Murugavel and Karthika Vaidyanathan
Music by: Sean Roldan
Release information: From Joker (2016) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Murugavel and Karthika Vaidyanathan
- Film / album: Joker
- Composer: Sean Roldan