Roman script
Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Odraa odraa odraa…hahahaha Male Part Odi konde iruppen Indha ulagam suzhalvathu nirkkum varai Naan odi konde iruppen Male Part Aadi kondirukkum kadal alaigal Isai paadi kondirukkum poonguyilgal Odi kondirukkum megangal Enai thedi kondirupadhai naan ariven Male Part Odi konde iruppen Indha ulagam suzhalvathu nirkkum varai Naan odi konde iruppen Male Part Odraa odraa odraa… Male Part Kadarkarai iruppadhu kaadhalukka Oru kaadhali varuvadhu vedhanaikka Adikkadi sirippadhu baavanaikka Unnai aandavan padaithathu sodhanaikka Hahahahaha… Male Part Maaligai paarungal vaan alavu Adhil manasugal paarungal kadukualavu Aandavan koduthathu oralavu Idhil avan avan thirudiyathevalavu Male Part Odi konde iruppen Indha ulagam suzhalvathu nirkkum varai Naan odi konde iruppen Male Part Odraa odraa odraa… Male Part Paadhaiyil pogindra paavigala Neengal padaithavan anuppiya aavigala Bodhaiyil irukkindra saamigala Indha boomiyil naangal oomaigala Male Part Engengum manidhargal surusuruppu Porul irukko illaiyo paraparappu Ellorkkum pidithathu paithiyama Ada enakkenna naan thaan vaithiyana Hahahahaha Male Part Kadavulai konjam thedungada Avan kaadhali peyarai kelungada Kadavulin kaadhalum tholviyada Avan kandathum boomiyil keliyada Male Part Odi konde iruppen Indha ulagam suzhalvathu nirkkum varai Naan odi konde iruppen Male Part Odraa odraa odraa…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓட்ராறா..........ஓட்ராறா.......ஓட்ராறா..ஹாஹாஹாஹா ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன் இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன்....... ஆண் : ஆடிக் கொண்டிருக்கும் கடலலைகள் இசை பாடிக் கொண்டிருக்கும் பூங்குயில்கள் ஓடிக் கொண்டிருக்கும் மேகங்கள் எனை தேடிக் கொண்டிருப்பதை நானறிவேன் ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன் இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன்....... ஆண் : ஓட்ராறா..........ஓட்ராறா.......ஓட்ராறா ஆண் : கடற்கரை இருப்பது காதலுக்கா ஒரு காதலி வருவது வேதனைக்கா அடிக்கடி சிரிப்பது பாவனைக்கா உன்னை ஆண்டவன் படைத்தது சோதனைக்கா ஹாஹாஹாஹா ஆண் : மாளிகை பாருங்கள் வானளவு அதில் மனசுகள் பாருங்கள் கடுகளவு ஆண்டவன் கொடுத்தது ஓரளவு இதில் அவனவன் திருடியதெவ்வளவு....... ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன் இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன்....... ஆண் : ஓட்ராறா..........ஓட்ராறா.......ஓட்ராறா.. ஆண் : பாதையில் போகின்ற பாவிகளா நீங்கள் படைத்தவன் அனுப்பிய ஆவிகளா போதையில் இருக்கின்ற சாமிகளா இந்த பூமியில் நாங்கள் ஊமைகளா ஆண் : எங்கெங்கும் மனிதர்கள் சுறுசுறுப்பு பொருள் இருக்கோ இல்லையோ பரபரப்பு எல்லோர்க்கும் பிடித்தது பைத்தியமா அட எனக்கென்ன நான்தான் வைத்தியனா ஹாஹாஹாஹா ... ஆண் : கடவுளைக் கொஞ்சம் தேடுங்கடா அவன் காதலி பெயரை கேளுங்கடா கடவுளின் காதலும் தோல்வியடா அவன் கண்டதும் பூமியில் கேலியடா.... ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன் இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன்....... ஆண் : ஓட்ராறா..........ஓட்ராறா.......ஓட்ராறா..
Song information
Singer: T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Rojavin Raja (1976) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Rojavin Raja
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan