Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Neeraazhi mandabathil Neeraazhi mandabathil Thendral neendhi varum nalliravil Thalaivan varaamal kaathirundhaal Pennorutthi vizhi malar Poothirundhaal Male Part Naadaalum mannavanin Naadaalum mannavanin Idhaya veedaalum pennarasi Thanimai thaalaamal thavithirundhaal Mannan kai thodum podhu thalai kunindhaal Female Part Vaadaiyilae vaazhai ilai kuniyum Vaadaiyilae vaazhai ilai kuniyum Karai varugaiyilae pongum alai kuniyum Kaadhalilae penmai thalai kuniyum Male Part Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa… Female Part Kaadhalilae penmai thalai kuniyum Idam koduppadharkkae Naanam thadai vidhikkum Male Part Pennilavu angae naanuvadhai kandu Female Part Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa… Male Part Pennilavu angae naanuvadhai kandu Vennilavu mugilil poi maraiya Vennilavu mugilil poi maraiya Kaadhalanum nalla vaelai kandaan Aval poo mugathil mutham nooru kondaan Female Part Neeraazhi mandabathil… Female Part Thaen alandhae idhazh thirandhirukka Adhai thaan alandhae mannan suvaithirukka Thaen alandhae idhazh thirandhirukka Adhai thaan alandhae mannan suvaithirukka Male Part Poi maraindha nilavum mugil kizhikka Male Part Poi maraindha nilavum mugil kizhikka Vandhu vaai niraiya avarkku vaazhthuraikka Female Part Peralavil iruvar endrirukka Male Part Sugam peruvadhilae ondraai inaindhirukka Female Part Ezh thisaiyil kadhir thondrum varai Male Part Angu pozhindhadhellaam inba kaadhal mazhai Female Part Neeraazhi mandabathil Thendral neendhi varum nalliravil Thalaivan varaamal kaathirundhaal Pennoruthi vizhi malar poothirundhaal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : நீராழி மண்டபத்தில் நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள் ஆண் : நாடாளும் மன்னவனின் நாடாளும் மன்னவனின் இதய வீடாளும் பெண்ணரசி தனிமை தாளாமல் தவித்திருந்தாள் மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள் பெண் : வாடையிலே வாழை இலை குனியும் வாடையிலே வாழை இலை குனியும் கரை வருகையிலே பொங்கும் அலை குனியும் காதலிலே பெண்மை தலை குனியும் ஆண் : ஆ.......ஆ......ஆ.......ஆ....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ..... பெண் : காதலிலே பெண்மை தலை குனியும் இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும் ஆண் : பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு வெண்ணிலவு முகிலில் போய் மறைய வெண்ணிலவு முகிலில் போய் மறைய காதலனும் நல்ல வேளை கண்டான் அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான் பெண் : நீராழி மண்டபத்தில் பெண் : தேனளந்தே இதழ் திறந்திருக்க அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க தேனளந்தே இதழ் திறந்திருக்க அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க ஆண் : பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க ஆண் : பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க வந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க பெண் : பேரளவில் இருவர் என்றிருக்க ஆண் : சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க பெண் : கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை ஆண் : அங்கு பொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை பெண் : நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thalaivan (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Thalaivan
- Composer: S. M. Subbaiah Naidu