Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Male Part
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaani
Indru mudhal iniya sugam
Peravaendum vanna malar maeni
Male Part
Nalla idam nee vantha idam
Varavaendum kaadhal maharaani
Indru mudhal iniya sugam
Peravaendum vanna malar maeni
Female Part
Engae un jaadai vizhum
Angae en aasai varum
Anbae un paer ezhudhum
Kann paarvai naal muzhudhum
Female Part
Nalla idam naan vantha idam
Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Peravaendum vanna pudhu rojaa
Chorus
……………………..
Male Part
Niththirai odida muthirai vaangida
Paththarai maatru thangam
Kungumam nenjinil sangamam aagida
Pongidum vellam engum
Female Part
Malligai poovinum melliyadhaagiya
Sevvanna kaalgal pinna
Niththamum aadida ithanai naadagam
Othigai paarppadhenna
Male Part
Thazuvaadho kaigal thaanaaga
Female : Unnaal kaninthaen kaniyaaga
Male Part
Nalla idam nee vantha idam
Female : Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Male : Peravaendum vanna pudhu rojaa
Female Part
Lalalala lala laaa…lalalalalalalalla laaa
Aahaaa…aaa….aaa….aaa….
Aahaaa…aaa….aaa….aaa….
Male Part
Kattazhagaanadhu otturavaagida
Ennangal thaedi pogum
Siththira poomagal mutham alanthida
Ethanai kaalam aagum
Female Part
Muthu manikkiLi kothu malarkkodi
Thiththiththa vaarthai solvaal
Vatta nilaa oli patta idathinil
Santhikka vaendum enbaal
Male Part
Idhamaana inbam saeraadho
Female : Indrae idhayam kuliraadho
Male Part
Nalla idam nee vantha idam
Female : Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Both : Peravaendum vanna pudhu rojaa
Female Part
{Lalalaa
Aahaaa…aaa….aaa….aaa….
Lalalaa
Aahaaa…aaa….aaa….aaa….} (2)தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
ஆண் : நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
பெண் : எங்கே உன் ஜாடை விழும்
அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும்
கண் பார்வை நாள் முழுதும்
பெண் : நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா
குழு : ..................................
ஆண் : நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட
பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட
பொங்கிடும் வெள்ளம் எங்கும்
பெண் : மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய
செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக
ஒத்திகை பார்ப்பதென்ன
ஆண் : தழுவாதோ கைகள் தானாக
பெண் : உன்னால் கனிந்தேன் கனியாக
ஆண் : நல்ல இடம் நீ வந்த இடம்
பெண் : வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
ஆண் : பெற வேண்டும் வண்ண புது ரோஜா
பெண் : லலலல லல லா........லாலாலலலளல்ல லா
ஆஹா.......ஆஅ......ஆஅ......ஆ......
ஆண் : கட்டழகானது ஒட்டுறவாடிட
எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட
எத்தனைக் காலம் ஆகும்
பெண் : முத்து மணிக் கிளி கொத்து மலர்க் கொடி
தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில்
சந்திக்க வேண்டும் என்பாள்
ஆண் : இதமான இன்பம் சேராதோ
பெண் : இன்றே இதயம் குளிராதோ
ஆண் : நல்ல இடம் நான் வந்த இடம்
பெண் : வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
ஆண் : பெற வேண்டும் வண்ண புது ரோஜா
பெண் : {லலலா
ஆஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....
லலலாஆஹா.......ஆஅ......ஆஅ.....ஆஅ....} (2)Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Galatta Kalyanam (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Galatta Kalyanam
- Composer: M. S. Vishwanathan