Roman script

Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female Part

Aa… naan solli thara enna ulladho…

O… nee innum enna chinna pillaiyo…

Athai magal endraal

Kai thottu mei thottu nee aadavillaiyo

Thathai aval pakkam

Thitthikkum thillaanaa nee paadavillaiyo

Laa laalaalalaa haa…

Female Part

Aa… naan solli thara enna ulladho…

O… nee innum enna chinna pillaiyo…

Athai magal endraal

Kai thottu mei thottu nee aadavillaiyo

Thathai aval pakkam

Thitthikkum thillaanaa nee paadavillaiyo

Laa laalaalalaa haa…

Female Part

Naan solli thara enna ulladho…

O… nee innum enna chinna pillaiyo…

Female Part

O… andhi malarai killi eduthu

En aasaiyai thoondi vidu

Indha iravil andha uravai

Nee ennendru paarthu vidu

Andhi malarai killi eduthu

En aasaiyai thoondi vidu

Indha iravil andha uravai

Nee ennendru paarthu vidu

Female Part

Vellathil vellamendru

Pinni vizhundhu

Manjathil ennai vaithu konjum virundhu

Ennathai kannathil nee mella ezhudhu

Sorgam idhuvendru sollattum thullattum

Naam kollum uravu

Laa laalaalalaa haa…

Female Part

Naan solli thara enna ulladho…

O… nee innum enna chinna pillaiyo…

Female Part

{Jaadai therindhu maedai amaithaal

Andha maedaiyil naaniruppen

Maedai yaedhu maeni yaedhu

Endra bodhaiyil nee iruppaai} (2)

Female Part

Vaanathu velli kinnam

Mella thazhuvum

Aadaikkum nenjil ulla aasai puriyum

Ammammaa appappaa en inba iravu

Sorgam idhuvendru sollattum thullattum

Naam kollum uravu

Laa laalaalalaa haa…

Female Part

Aa… naan solli thara enna ulladho…

O… nee innum enna chinna pillaiyo…

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆ.....நான் சொல்லித் தர என்ன உள்ளதோ

ஓ.....நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ

அத்தை மகன் என்றால்

கைத்தொட்டு மெய்த்தொட்டு நீ ஆடவில்லையோ

தத்தை அவள் பக்கம்

தித்திக்கும் தில்லானா நீ பாடவில்லையோ

லா லாலாலலா ஹா.....

பெண் : ஆ.....நான் சொல்லித் தர என்ன உள்ளதோ

ஓ.....நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ

அத்தை மகன் என்றால்

கைத்தொட்டு மெய்த்தொட்டு நீ ஆடவில்லையோ

தத்தை அவள் பக்கம்

தித்திக்கும் தில்லானா நீ பாடவில்லையோ

லா லாலாலலா ஹா.....

பெண் : ஆ.....நான் சொல்லித் தர என்ன உள்ளதோ

ஓ.....நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ

பெண் : ஓ...அந்தி மலரைக் கிள்ளியெடுத்து

என் ஆசையை தூண்டிவிடு

இந்த இரவில் அந்த உறவை

நீ என்னென்று பார்த்து விடு

அந்தி மலரைக் கிள்ளியெடுத்து

என் ஆசையை தூண்டிவிடு

இந்த இரவில் அந்த உறவை

நீ என்னென்று பார்த்து விடு

பெண் : வெள்ளத்தில் வெள்ளமென்று

பின்னி விழுந்து

மஞ்சத்தில் என்னை வைத்து கொஞ்சும் விருந்து

எண்ணத்தை கன்னத்தில் நீ மெல்ல எழுது

சொர்க்கம் இதுவென்று சொல்லட்டும் துள்ளட்டும்

நாம் கொள்ளும் உறவு.........

லா லாலாலலா ஹா.....

பெண் : ஆ.....நான் சொல்லித் தர என்ன உள்ளதோ

ஓ.....நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ

பெண் : {ஜாடை தெரிந்து மேடை அமைத்தால்

அந்த மேடையில் நானிருப்பேன்

மேடை எது மேனி எது

என்ற போதையில் நீ இருப்பாய்} (2)

பெண் : வானத்து வெள்ளிக் கிண்ணம்

மெல்லத் தழுவும்

ஆடைக்கும் நெஞ்சில் உள்ள ஆசை புரியும்

அம்மம்மா அப்பப்பா என் இன்ப இரவு

சொர்க்கம் இதுவென்று சொல்லட்டும் துள்ளட்டும்

நாம் கொள்ளும் உறவு.........

லா லாலாலலா ஹா.....

பெண் : ஆ.....நான் சொல்லித் தர என்ன உள்ளதோ

ஓ.....நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ

Song information

Singer: L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Sange Muzhangu (1972) · Lyricist: Kannadasan

Explore this song