Roman script
Singers : K. Swarna and T. M. Soundararajan Music by : V. Kumar Male Part Mutham mutham senthaen allavoo Nitham nitham thanthaen allavoo Female Part Kannaa kannaa un vegam enna Kannam kannam punn aana dhenna Innum thanthaal penn ennaavadhoo Male Part Mutham…… mutham Male Part Idhayathilae oru kadhavirukkum Iravu pagal adhu thiranthirukkum Female Part Vizhigalilae oru vazhi irukkum Vaavenavae manam azhaithirukkum Male Part Idhazh suvaiyoo illai madhu suvaiyoo Hoo oo hoo oo hoo oooo oooo Idhazh suvaiyoo illai madhu suvaiyoo Pidi idaiyoo illai malarkodiyoo Kurunagaiyoo adhu sirukadhaiyoo Kurunagaiyoo adhu sirukadhaiyoo Kaalam ellaam varum thodarkadhaiyooo Female Part Mudhal mudhaalaai enna arimugamoo Hoo oo hoo oo ooooo Mudhal mudhaalaai enna arimugamoo Kalaigalilae nalla anubhavamoo Rasipadhilae idhu pudhuvidhmoo Ragasiyamaai thoda sugam varumooo Male Part Mutham mutham senthaen allavoo Nitham nitham thanthaen allavoo Female Part Kannaa kannaa un vegam enna Kannam kannam punn aana dhenna Innum thanthaal penn ennaavadhoo Male Part Lala lala lalaaala laaa Lala lala lalaaala laaa
தமிழ்
பாடகர்கள் : கே. ஸ்வர்ணா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : முத்தம் முத்தம் செந்தேனல்லவோ நித்தம் நித்தம் தந்தேனல்லவோ பெண் : கண்ணா கண்ணா உன் வேகமென்ன கன்னம் கன்னம் புண்ணானதென்ன.. இன்னும் தந்தால் பெண் என்னாவதோ.... ஆண் : முத்தம் முத்தம் ஆண் : இதயத்திலே ஒரு கதவிருக்கும் இரவு பகல் அது திறந்திருக்கும் பெண் : விழிகளிலே ஒரு வழி இருக்கும் வாவெனவே மனம் அழைத்திருக்கும்.... ஆண் : இதழ் சுவையோ இல்லை மது சுவையோ ஹோ ஊ ஹோ ஊ ஹோ ஓஒ ஓஒ இதழ் சுவையோ இல்லை மது சுவையோ பிடி இடையோ இல்லை மலர்க்கொடியோ குறுநகையோ அது சிறுகதையோ குறுநகையோ அது சிறுகதையோ காலமெல்லாம் வரும் தொடர்கதையோ பெண் : முதல் முதலாய் என்ன அறிமுகமோ ஹோ ஊ ஹோ ஒ ஓஓ முதல் முதலாய் என்ன அறிமுகமோ கலைகளிலே நல்ல அனுபவமோ ரசிப்பதிலே இது புதுவிதமோ ரகசியமாய் தொட சுகம் வருமோ..... ஆண் : முத்தம் முத்தம் செந்தேனல்லவோ நித்தம் நித்தம் தந்தேனல்லவோ பெண் : கண்ணா கண்ணா உன் வேகமென்ன கன்னம் கன்னம் புண்ணானதென்ன.. இன்னும் தந்தால் பெண் என்னாவதோ.... ஆண் : லல லல லலால லா லல லல லலால லா
Song information
Singers: K. Swarna and T. M. Soundararajan
Music by: V. Kumar
Release information: From Puthisaligal (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. Swarna and T. M. Soundararajan
- Film / album: Puthisaligal
- Composer: V. Kumar