Roman script

Singer : T. M. Soundarajan

Music by : T. R. Pappa

Male Part

Muthaitharu pathith thirunagai

Aththikkirai saththi saravana

Muththikkoru viththu gurubara..enavodhum

Muthaitharu pathith thirunagai

Aththikkirai saththi saravana

Muththikkoru viththu gurubara..enavodhum

Male Part

Mukkatpara marku suruthiyin

Murpattathu karpith thiruvarum

Muppaththumu varkkath thamararum adipaena

Mukkatpara marku suruthiyin

Murpattathu karpith thiruvarum

Muppaththumu varkkath thamararum adipaena

Male Part

Paththu thalai thaththa kanaithodu

Otraikkiri maththai poruthoru

Pattappagal vatta thigiriyil iravaaga

Paththu thalai thaththa kanaithodu

Otraikkiri maththai poruthoru

Pattappagal vatta thigiriyil iravaaga

Male Part

Paththarkira thaththai kadaviya

Pachchaippuyal mechcha thaguporul

Patchaththodu ratchith arulvadhum orunalae

Paththarkira thaththai kadaviya

Pachchaippuyal mechcha thaguporul

Patchaththodu ratchith arulvadhum orunalae

Male Part

Thiththiththeya otha paripura

Nirththappadham vaithu payiravi

Thikkotka nadikka kazhukodu kazhuthaada

Thiththiththeya otha paripura

Nirththappadham vaithu payiravi

Thikkotka nadikka kazhukodu kazhuthaada

Male Part

Thikkuppari atta payiravar

Thokkuththogu thokkuth thoguthogu

Chithrappavurikku thrikadaka enavodha

Thikkuppari atta payiravar

Thokkuththogu thokkuth thoguthogu

Chithrappavurikku thrikadaka enavodha

Male Part

Koththupparai kotta kalamisai

Kukkukkuku kukkuk kukukuku

Kuththipputhai pukku pidiyena muthukogai

Koththupparai kotta kalamisai

Kukkukkuku kukkuk kukukuku

Kuththipputhai pukku pidiyena muthukogai

Male Part

Kotputrezha natputtravunarai

Vettippali yittu kulakiri

Kuththuppada voththu poravala perumalae….

Kotputrezha natputtravunarai

Vettippali yittu kulakiri

Kuththuppada voththu poravala perumalae…

தமிழ்

பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

ஆண் : முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும்

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும்

ஆண் : முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப்

முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப்

ஆண் : பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் .. இரவாகப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் .. இரவாகப்

ஆண் : பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ... ஒருநாளே

பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ... ஒருநாளே

ஆண் : தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு ... கழுதாடத்

தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு ... கழுதாடத்

ஆண் : திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

ஆண் : கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென ... முதுகூகை

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென ... முதுகூகை

ஆண் : கொட்புற்றெழ நட்புற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட வொத்துப் பொரவல ... பெருமாளே

கொட்புற்றெழ நட்புற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட வொத்துப் பொரவல ... பெருமாளே...

Song information

Singer: T. M. Soundarajan

Music by: T. R. Pappa

Release information: From Arunagirinathar (1964) · Singer: T. M. Soundarajan · Lyricist: Arunagirinathar · Music: T. R. Pappa

Explore this song