Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Pon magalae un porumai

Boomikkae porukkallaiyo

Poovirunthum pottirunthum

Mounamthaan un nilaiyo

Male Part

Engirunthu unakkazhaippu

Eppadiththan vanthu vidum

Engalidamirunthu unnai

Entha dheivam piriththu vidum

Male Part

Mukkanigal saernthirukka thattaaga irunthaayae

Moondru nadhi kalanthirukka kadalaaga amainthaayae

Thiyaagaththin uchchiyilae neeyoru kalasammaa

Dheivaththin vaasalilae neeyoru dheepam amma

Dheepam amma….

Male Part

Dharaniyilae pengalellam

Thaayaavathillaiyammaa

Thaayagum pengalellam

Neeyaavathillaiyamma….

Male Part

Kudumbam ennum koyilgal

Aayiram aayiaram

Kulamagal yaavarum ovvoru goburam

Naarpuram oongiya goburangal

Naduvil thanga Goburam

Nallavaragal maththiyilae nee thanga gopuram

Nee thanga gopuram…..nee thanga gopuram

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : பொன் மகளே உன் பொறுமை

பூமிக்கே பொறுக்கல்லையோ

பூவிருந்தும் பொட்டிருந்தும்

மௌனம்தான் உன் நிலையோ

ஆண் : எங்கிருந்து உனக்கழைப்பு

எப்படித்தான் வந்து விடும்

எங்களிடமிருந்து உன்னை

எந்த தெய்வம் பிரித்து விடும்.....

ஆண் : முக்கனிகள் சேர்ந்திருக்க தட்டாக இருந்தாயே

மூன்று நதி கலந்திருக்க கடலாக அமைந்தாயே

தியாகத்தின் உச்சியிலே நீயொரு கலசமம்மா

தெய்வத்தின் வாசலிலே நீயொரு தீபமம்மா.....

நீயொரு தீபமம்மா.....

ஆண் : தரணியிலே பெண்களெல்லாம்

தாயாவதில்லையம்மா

தாயாகும் பெண்களெல்லாம்

நீயாவதில்லையம்மா.....

ஆண் : குடும்பம் என்னும் கோயில்கள்

ஆயிரம் ஆயிரம்

குலமகள் யாவரும் ஒவ்வொரு கோபுரம்

நாற்புறம் ஓங்கிய கோபுரங்கள்

நடுவில் தங்ககோபுரம்

நல்லவர்கள் மத்தியிலே நீ தங்க கோபுரம்.....

நீ தங்க கோபுரம்.....நீ தங்க கோபுரம்.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Thanga Gopuram (1971) · Lyricist: Ra. Pazhanisami

Explore this song