Roman script
Singers : P. Susheela and Vani Jayaram Music by : Shankar Ganesh Lyrics by : Madhuri Pachaiappan Female Part Mogana pon chithiramthan naanadi Ennodu mothi nadanamaduvathu yaaradi yaaradi Female Part Mogana pon chithiramthan naanadi Ennodu mothi nadanamaduvathu yaaradi yaaradi Female Part Aadi varum pon vilakku naanadi Ennodu aattathile pottiyittu paaradi paaradi Female Part Naattaikurichi paadi naanaduven naattiyam Nalina kalai pottiyile naan velluven nichayam Female Part Ettu thisaigalilum en sathangai oli ketkum Vettum vizhi asaippil vinnagame asainthaadum Female Part Kotti muzhukkugirai keerthiyellaam pesugiraai Itta adi itharku ethiraaga aadadi Female Part Sollukku sol yenadi Puruva villuku bathil solladi Naan illaatha idaiyaada iru thanga kudamaada Nillamal suzhandraaduven Maathar nenjellaam kuzhainthaduven Female Part Kaathirendil kuzhaiyaada kaiyirandil valaiyaada Kaalirendil silambaada kannirendil oliyaada Kaarigai naan sathiraaduven bharatha kalaiyinile mudi sooduven Female Part Bharatha kalai pazhaiya kathai thaanadi athil Paarpatharku pagattellaam yethadi yethadi Female Part Panbai valarpathu thaan kalaigaladi athil Pagattukal nuzhaivathendraal kuraigaladi kuraigaladi Female Part Alukki kulukki thalukki minukkiye Aadaamal aaduvathu naattiyama Female Part Anubavam unakku vanthiduma en Anubavam unakku vanthiduma Female Part Kodikku nelivai koduthavan yaaradi Udukkai kandu naan anjuvenaa Tholviyai kandu naan kenjuvenaa Naan jeyathile mithakkum maalini Naan jeyathil pirantha chithra Female Part Vithaiyai kaattadi paarkkalam En vegathil aadadi paarkkalam
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மாதுரி பச்சையப்பன் பெண் : மோகன பொன் சித்திரம்தான் நானடி என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி பெண் : மோகன பொன் சித்திரம்தான் நானடி என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி பெண் : ஆடி வரும் பொன் விளக்கு நானடி என்னோடு ஆட்டத்திலே போட்டியிட்டு பாரடி பாரடி பெண் : நாட்டைக்குறிச்சி பாடி நானாடுவேன் நாட்டியம் நளின கலை போட்டியிலே நான் வெல்லுவேன் நிச்சயம் பெண் : எட்டுத் திசைகளிலும் என் சதங்கை ஒலி கேட்கும் வெட்டும் விழி அசைப்பில் விண்ணகமே அசைந்தாடும் பெண் : கொட்டி முழக்குகிறாய் கீர்த்தியெல்லாம் பேசுகிறாய் இட்ட அடி இதற்கு எதிராக ஆடடி........ பெண் : சொல்லுக்கு சொல் ஏனடி புருவ வில்லுக்கு பதில் சொல்லடி நான் இல்லாத இடையாட இரு தங்க குடமாட நில்லாமல் சுழன்றாடுவேன் மாதர் நெஞ்செல்லாம் குழைந்தாடுவேன் பெண் : காதிரெண்டில் குழையாட கையிரெண்டில் வளையாட காலிரெண்டில் சிலம்பாட கண்ணிரெண்டில் ஒளியாட காரிகை நான் சதிராடுவேன் பரதக் கலையினிலே முடி சூடுவேன் பெண் : பரதக்கலை பழையக் கதை தானடி – அதில் பார்ப்பதற்கு பகட்டெல்லாம் ஏதடி ஏதடி பெண் : பண்பை வளர்ப்பதுதான் களைகளடி அதில் பகட்டுகள் நுழைவதென்றால் குறைகளடி குறைகளடி பெண் : அலுக்கி குலுக்கி தளுக்கி மினுக்கியே ஆடாமல் ஆடுவது நாட்டியமா பெண் : அனுபவம் உனக்கு வந்திடுமா என் அனுபவம் உனக்கு வந்திடுமா பெண் : கொடிக்கு நெளிவை கொடுத்தவன் யாரடி உடுக்கை கண்டு நான் அஞ்சுவேனா தோல்வியைக் கண்டு நான் கேஞ்சுவேனா நான் ஜெயத்திலே மிதக்கும் மாலினி நான் ஜெயத்தில் பிறந்த சித்ரா பெண் : வித்தையைக் காட்டடி பார்க்கலாம்..... என் வேகத்தில் ஆடடி பார்க்கலாம்......
Song information
Singers: P. Susheela and Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyrics by: Madhuri Pachaiappan
Release information: From Kaman Pandigai (1983) · Singer: P. Susheela and Vani Jayaram · Lyricist: Madhuri Pachaiappan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and Vani Jayaram
- Film / album: Kaman Pandigai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Madhuri Pachaiappan